Sunday, July 29, 2018

நீ இல்லாதபோது

ரசிக்கிறேன் ....

கடல் அலையை ...
வான்  நிலவை ....
தோட்டத்து பூக்களை ...
மழையின் சங்கீதத்தை ...
அந்தி மாலையின் மயக்கத்தை ...

.... நீ இல்லாதபோது ... உன் நினைவுகளோடு !!!!



என் மனது எனக்கு துரோகம் செய்கிறது ..
என்னிடம்தான் இருக்கிறது  ...
ஆனால் உனக்கு அடிமையாக இருக்கிறது ..
நீ சொல்வதை கேட்கிறது ....




ஆடி மாசம்
எதையாவது ஆரம்பிச்சா முடிவில்லாம இழுக்குமாமே !!!
வா ....  காதலிக்கலாம் !!

நானும் முட்டாள்தனமாக யோசிக்கிறேன்

இதயத்தில் அன்பிருக்கும்
மூளையில் அறிவிருக்கும்
அதனால்தான் உன்னை இதயத்தில் வைத்தேன்
மூளை உன்னை உள்ளே விட்ருமா என்ன ?

வைரஸ் வந்து ஹார்ட் டிஸ்கில் இருந்த எல்லாமே அழிஞ்சு போச்சு
உன் போட்டோவை தவிர
ஒரு வைரஸ் இன்னொரு வைரஸை தொடாதாமே ?

ஒரே இருமல்.
நெஞ்சிலே சளி இருக்குன்னு டாக்டர் சொன்னார் .
நீ இருக்கேன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன் !!


சில நேரங்களில் உன்னைப்போல் நானும் முட்டாள்தனமாக யோசிக்கிறேன்
மொபைலிலிருந்து உன் எண்ணை அழித்து விட்டால்
உன் நினைவுகளும் அழிந்து விடும் என்று !!!

உன்னை தாங்கிக்கொள்ள நானிருக்கிறேன்

வான் நிலாவிற்கு வருடத்தில் ஒரு நாள்தான் கிரகணம்.
என் மனதின் நிலாவிற்கு தினம் தினம் கிரகணம்.

நீ அஞ்சாதே !!
நீ விழும்போது எப்போதும் உன்னை தாங்கிக்கொள்ள 
நானிருக்கிறேன்  ----- தரை  

என் அப்ளிகேஷனுக்கும் உன் நினைவுகளுக்கும்
ஒரு எழுத்துதான் வித்தியாசம் .
முதலாவது crash ஆகுது. ரெண்டாவது crush ஆகுது .
ரெண்டையுமே uninstall பண்ண முடியல்ல !!!
ரெண்டுமே என்னோடதல்லவா !!!!


உன் நினைவுகளின் சில பக்கங்களும்
என் வெப் சைட்டின் சில பக்கங்களும் ஒண்ணுதான் .
ரெண்டுமே சுத்துது ... அடிக்கடி hang ஆகுது .. அப்பப்போ blank ஆகுது ... சில நேரங்கள்ல தப்புன்னு சொல்லுது.
என் வெப் சைட்டை நான் fix பண்ணிருவேன்  .... உன் நினைவுகளை ....!!!??


Request ஒன்று அவளுக்கு அனுப்பினேன்.
404 என்று Response வந்தது.
(அங்கேயுமா !!?)

கிணற்றிலும் குளத்திலும் கண்மாயிலும் ஏரியிலும் குப்பையை போட்டு அசுத்தம் செய்வார் !
தொட்டியில் மீன் வளர்த்து புண்ணியம் தேடுவார் !!
பாட்டில் நீர் குடித்து ஆரோக்கியம் வேண்டுவார் !!!


கதையல்ல ... கவிதை
சின்ன வயசுல "சப்போட்டா பழம் காயா இருக்கு .. பழுக்க வைக்க என்ன பண்ணணும் " ன்னு பாட்டிகிட்ட கேட்டேன் .
பாட்டியும் "அரிசி பானைல பொதச்சு வைடா .. பழுக்கும்" ன்னுச்சு .
"மூணு நாளாகியும் பழுக்கலியே பாட்டி  " ன்னு  கேட்டேன்.
"அட கிறுக்கு பய புள்ள ... நீ பொதச்சு வச்சது சப்போட்டா இல்ல ... உருளைக்கிழங்குடா " ன்னுச்சு
அப்புறம் பருவ வயசுல அவளோட நினைவுகளை மனசுல பொதச்சு வச்சேன்.
"கனிந்து காதலாகி வரல்லியே" ன்னு அவகிட்ட கேட்டேன் ...
அவ சொன்னா ... "பழுக்கும்னு நீ பொதச்சு வச்சது சப்போட்டா இல்லடா ... உருளைக்கிழங்கு" ன்னு ..
(படிச்சுட்டு அழாதீங்க!!)