Thursday, December 31, 2020

ஒரு நொடி

வாழ்வின் ஒரு வருடம் 

நினைவிலிருந்து மங்கலாம் !

வாழ்வின் ஒரு நொடி 

நினைவிலேயே தங்கலாம் !

Monday, December 28, 2020

பொங்குமடி

கன்னி நீயும் கடிச்சுபுட்டா 
நுனிக்கரும்பும் இனிக்குமடி!
இதழ் சிந்தும் கனிரசத்தை 
கரும்பு வயலும் கேட்குமடி !
வாடி வாசல் விட்ட காளை 
காலடியில் கிடக்குமடி !
உன் முகத்த பாத்து புட்டா
காலிப்பானையும் பொங்குமடி !


போகி

எந்த போகியில் எரித்தாயோ 
என் நினைவுகளை!
எந்த போகியிலும் எரியவில்லை 
உன் நினைவுகளே!


Sunday, December 27, 2020

பொங்கல்

வாழையிலை குடைபிடித்து
மழைவெளியில் நடப்போமா 
கம்பங்காட்டு மூலையிலே 
காதல்கதை படிப்போமா

கையளவு நெஞ்சத்திலே
கடலளவு காதலடி 
விட்டு நீயும் போனபின்னே 
ஆறடிதான் எனக்கு ஆறுதலடி 

சின்ன வீடு

எத்தனை பிறவியும் நானெடுப்பேன் 
அத்தனையிலும் கூட நீயிருந்தா 
புதைகுழியிலும் நீந்திடுவேன் 
நெஞ்சக்குழியில் நீயிருந்தா 
குடிசையும் சொர்க்கம்தானே 
மடிமீது கொஞ்ச நீயிருந்தா 
சின்ன வீடும் வச்சுக்குவேன்் 
அந்த வீட்டிலும் நீயிருந்தா 

கரும்பு

மணப்பாறை முறுக்கு போல 
முறுக்கிகிட்டு நடக்கிறியே
சேத்து வச்ச ஆசையிருந்தும் 
காக்க வச்சு கொல்லுறியே 

கிட்ட வந்து தொட்டு புட்டா
சிட்டு போல பறக்கிறியே 
புல்லுகட்டு சுமப்பவளே 
ஜல்லிக்கட்டாய் அடக்குறியே 

தை மாசம் வந்திருச்சு 
கைபிடிக்க மோகமடி
எங்க வீட்டு வாசலில் நீ
பொங்கல் வைப்பது எப்போடி