Tuesday, February 14, 2023

தென்றல்

 காற்றே 

உண்மையை 

சொல் ..

அவள் 

இதயம் நுழைந்து 

வருவதால்தானே 

உனக்கு 

பெயர் 

தென்றல் !


ஒவ்வொரு 

பூவையும் 

தொட்டு பார்த்து 

யாரையோ தேடி 

அலைகிறது  

என்னைப்போலவே

தென்றலும் !


அவளோடு 

என்ன 

உடன்படிக்கையோ ...

அடிக்கடி 

தழுவி 

அவளை 

நினைவூட்டி 

செல்கிறது 

தென்றல் !


பூவின் 

வாசனையை 

கொள்ளையடித்து 

ஏதுமறியா 

கள்வனாய் 

கடந்தது 

தென்றல் !


தேகத்தை 

குளிர வைத்து 

நெஞ்சில் 

அனல் மூட்டி 

கடந்து போனது 

தென்றல் !


என்னை 

சாய்த்து 

நகைக்கிறது 

பூவை கூட 

சாய்க்க 

திராணியற்ற 

தென்றல் !


தென்றல் கவிதைகள் 


எனக்கே 

எனக்கென்று 

தனியாக 

தென்றலொன்று 

வேண்டும் ...

என் ஆசைகளை 

சுமந்து வந்து 

உன் 

காது மடலில் 

கிசுகிசுக்க !


தென்றல் 

தீண்டும்போது 

நீ 

சிலிர்ப்பதை 

போலவே 

நானும் 

சிலிர்த்து 

போகிறேன் 

உன் 

பார்வை 

தீண்டும்போது !


உன் 

விழியசைவில் 

தன 

வியர்வையை 

ஆற்ற 

காத்திருக்கிறது 

தென்றல் !



என்னை 

பற்றித்தான் 

எழுதுகிறானா ...

மெல்ல 

ஜன்னல் திறந்து 

எட்டி பார்த்தது 

உன்மீது 

பொறாமை கொண்ட 

தென்றல் !

No comments:

Post a Comment