நீ
விடுத்த
வார்த்தைகளில்
தொடுத்த
கவிதைகள் !!
இன்னமும்
புரியவில்லை ....
உனது காதல்
பொய் பூசி
வந்ததா ...
இல்லை ....
உனது பொய்
காதலை
பூசி வந்ததா !!
உனது
புன்னகையை தந்து
கவிஞனாக்கினாய் ...
பொன்நகை தருகிறேன்
காதலனாக்கி விடு !
உனது
அழகில்
குளிர்
காய்கிறதோ ...
நெருப்பு !!
கத்தியின்றி
ரத்தமின்றி
யுத்தமொன்று
வருகுது ...
உன் கண்கள்
அதனை
நடத்துது !
நீ
கற்களை
வீசியிருந்தால்
என் உயிரை
கொன்றிருக்கும் ...
உயிரோடு
கொல்கிறதே
நீ
வீசிய
சொற்கள்
மேகமே மேகமே
பால் நிலா தேய்ந்ததே...
தேகமே தேயினும்
தேன் குரல் வீசுதே...
காதல்
குடைவது
சுகமானதுதான் ...
அதை விட
சுகமானது
சில வேளைகளில்
காதை குடைவது..
ஏர் முனை போன்ற
கூரிய விழிகளால்
என் இதய நிலத்தை
உழுகின்றாய்
விளைந்த நெற்கதிர்கள்
காற்றில் சலசலக்கும் போது
கிளப்பும் இன்னிசை
போன்ற சிரிப்பால்
என்னை
வசீகரிக்கிறாய்
களத்துமேட்டில்
குவிந்து கிடக்கும்
நெல்மணிகள் போன்று
தகதகக்கும்
விம்மி நிற்கின்ற
உன் அழகியலால்
என்னை அக்கினியாய்
கொதிக்க வைக்கிறாய்
வளைந்து நெளிந்து
ஓடுகின்ற
வாய்க்கால் நீர் போன்ற
உன் கூந்தலால்
என் ரத்த அழுத்தத்தை
எகிற வைக்கிறாய்
அறுவடைக் காலத்தின்
தெள்ளிய நிலவாக
பட்டொளி வீசுகின்ற
உன் பேரழகு
என்னை சவாலுக்கு
அழைக்கும் போதெல்லாம்
உன்னிடம் நான்
அடிமையைப் போலல்லவா
உழைப்பை இழக்க
வேண்டியிருக்கிறது