Saturday, January 28, 2023

சீனி சிரிப்பு

 எந்த 

கணனியில் 

கணக்கு போடுவது ...

உனது 

இதழ் 

அணிந்திருக்கும் 

புன்னகை 

எத்தனை 

காரட் என்று ...!!


குபேரனும் 

ஏழையாகி 

விட்டானாம் ...

உனது 

புன்னகையின் 

விலை கேட்டு !!!


உன் 

புன்னகை 

மாடலில் 

மட்டுமே 

வளம் பெறுகிறது 

எனது 

இதய நாடு !!


புன்னகை 

சிந்திவிடு 

ஒரு வினாடி ... 

ஆயுளை 

ஏந்திவிடும்  

எனது 

இதய நாடி !!! 

 


பாவம் 

செடியில் 

பூத்த மலர்கள்  ...

உன் இதழில் 

நொடியில் 

பூத்த 

புன்னகை 

மலருக்கு வெட்கி 

உன் 

காலடியிலேயே 

விழுந்து விட்டன !!


இது 

என்ன மாயம் ...

உனது 

சீனி சிரிப்பு 

எனது 

ரத்தத்தில் 

சர்க்கரையின் 

அளவை 

கட்டுக்குள் 

வைக்கிறதே !!


இவ்வளவு 

புன்னகையை 

சேர்த்து 

வைத்திருக்கிறாய் ...

அம்பானி 

அதானி என்று 

யார் யாரையோ 

செல்வந்தர் 

என்கிறார்கள் !!!


உனது 

ஒரு வினாடி 

புன்னகை 

டவுன்லோட் 

செய்துவிடுகிறதே 

ஓராயிரம் கோடி 

இன்பங்களை !!


கடல் தொடும் 

கதிரவன்  

வெட்கத்தில் 

சிவக்கிறது ...

உன் 

இதழ் தொடும் 

புன்னகை 

கண்டு !!!


வார 

இதழ்களின் 

கவிதை பக்கங்கள் 

கலகலத்து போகின்றன 

உனது 

ஈர இதழ் பிரசுரிக்கும் 

புன்னகை 

கவிதைகளை படித்து !!!


உனது 

புன்னகையில் 

குளித்து

சொர்க்கம் 

கண்டபின்

எப்படி 

பொய் சொல்வது ..

கங்கையில் 

குளித்தால் 

பாவம் 

தீருமென்று !!


உனது 

அதரங்கள் 

புன்னகை 

மேடை 

கட்டும்

போதெல்லாம் 

எனது 

துயரங்கள் 

பாடை 

கட்டி 

கொள்கின்றன !!


ராகு 

காலத்தையும் 

அமிர்த

யோகமாக்கி 

விடுகிறது ...

அவ்வப்போது

வந்து போகும் 

உனது 

புன்னகை

யோகம் !!


கவிதைக்குள் 

இன்னொரு 

கவிதை  ....

உனது 

முகத்தில் 

புன்னகை !!!


உனது 

அரை வினாடி 

புன்னகையை 

கம்பன் 

கண்டிருந்தால் 

கவிதையில் 

வடித்திருப்பான் 

ஆயிரம் 

பால காண்டங்களை !!


இன்னமும் 

குழப்பம் தீரவில்லை 

நீ உதித்த  நாளா ...

நீ முதல் வார்த்தையை 

உதிர்த்த நாளா ...

நீ முதல் புன்னகையை 

உதிர்த்த நாளா  ...

எதனை 

கவிதை நாளாக 

அறிவிப்பதென்று !


விலை மதிப்பில்லா 

பொருள் ஒன்றை 

பரிசளிக்க 

வேண்டும் ....

தருவாயா 

உனது 

புன்னகையை !!



உனது 

புன்னகை புயலால் 

சாய்ந்து விட்ட 

எனது இதயத்திற்கு 

இதழ்களாலேயே 

கொடுத்துவிடு 

நிவாரணத்தை ...

எனது கன்னத்தில் !!


உனது 

அரை வினாடி 

புன்னகையே 

நிறைத்து 

விடுகிறது 

எனது 

கவிதை 

பக்கங்களை !!


No comments:

Post a Comment