Wednesday, July 19, 2023

காதல் நகைகள் - கொலுசு


இசைக்கருவிகளின் 

வரிசையில் 

சேர்த்துவிட்டார்களா 

உனது 

கால் 

கொலுசை !!!

 

உனது

கல்லீரல் 

மண்ணீரல் 

பித்தப்பை 

கர்ப்பப்பை 

இவற்றின் 

செயல் திறனை 

கூட்டுகிறதா ...

இல்லை

எனது 

இதயத்தின் 

செயல்திறனை 

சோதிக்கிறதா !!!


காலில் 

மருதாணியை 

நீ 

போட்டு கொண்டாயா ...

இல்லை 

உனது 

பாதம் தழுவிய 

வெட்கத்தில் 

கொலுசு 

பூசி விட்டதா !!


நீ 

பேசுவதெல்லாம் 

பாடல் 

என்று நினைத்து 

ஜதி 

சொல்லிக் 

கொண்டிருக்கிறது 

உனது 

கொலுசு !


உனது 

கணுக்கால் 

அசைவின் 

கொலுசு 

இசைக்கு 

நடனமாடி 

களிக்கிறது 

காதோரம் 

கம்மல் !!


நீயும் 

நானும் 

ரகசியமாகத்தானே 

பேசுகிறோம் ..

எனக்கும் 

கேட்கிறதென 

பரிகசிக்கிறது 

உனது 

கொலுசொலி !!


காலில்தானே 

கிடக்கிறது ...

இருந்தும் 

என்ன 

கர்வம் பார் ...

அரசியின் 

கிரீடத்தில் 

ஜொலிப்பதை 

போல !! 


நீ 

நிலத்தில் 

கால் 

வைக்கும்போதெல்லாம் 

அஞ்சி 

சிணுங்குகிறது 

கொலுசு ...

உனது 

பாதத்திற்கு 

வலிக்குமோ என !!


நகைகளை தானே 

கொள்ளை 

அடிப்பார்கள் ...

என்னை 

கொள்ளை 

அடிக்கிறதே 

உனது 

நகைகள் !!


எப்போது 

விடுவிப்பாய் 

உனது கொலுசு 

மணிகளுக்கிடையில் 

சிக்கி 

தவிக்கும் 

எனது 

கவிதை 

வரிகளை !!

No comments:

Post a Comment