பூக்களை
விற்கிறதே ...
ஓவியமொன்று
==================
வாசமில்லா
வாழ்விற்கு
வைத்திருக்கிறாயா
வாசமுள்ள
மலர்களை !
==================
பூவொன்று
பூவேந்தி
நிற்பதால்தானோ
இதனை
பூவுலகு
என்கிறார்கள் !!
==================
எதை
விற்கிறாய் ...
பூவையா ?
பூ நகையையா ?
==================
ரோஜா
மலரென்று
வேறெதையோ
தருகிறாயே ...
எப்படி
வாங்கிக்கொள்வது !
==================
தாமரை
இல்லையென்று
பொய்
சொல்கிறாய் ..
தாமரை
இதழால் !
==================
==================
உன்னை
விட்டு
பிரிந்தால்
வாடி விடாதா
கூடை
பூக்கள் !
==================
கடந்து
போகின்றன ..
எத்தனையோ
அந்தி
மாலைகள் !!
==================
கையில்
பூக்களோடு
எந்த
மாலைக்காக
காத்திருக்கிறாய்!
==================
மாலை
வந்தால்
வாடிவிடுமோ
பூக்கள்
என்று
அஞ்சாதே !!
==================
==================