கோதை மலர்களை தந்தாள் ...
சபரி கனிகளை தந்தாள் ...
மீரா இசையை தந்தாள் ...
குசேலன் அவலை தந்தான் ...
கர்ணன் புண்ணியத்தை தந்தான்
என்னிடம்
என்ன
எதிர்பார்க்கிறாய் !!?
=================================
உறவுப்பாலத்தை
சொல்லெனும்
குண்டால்
தகர்ப்பதும்
காதல்
பயங்கரவாதம்தான் !!
=================================
பார்வை நேரத்தில்
மருத்துவர்கள்
நோய் தீர்க்க
முனைகிறார்கள் ...
உனது
பார்வை
நேரத்தில்தான்
எனக்குள்
நோயையே
'விதைக்கிறாய் !
=================================
எனது
கவிதை
புத்தகத்தில் ...
எழுதப்பட்ட
சில பக்கங்கள் ..
வரையப்பட்ட
சில பக்கங்கள் ..
வண்ணமயமான
சில பக்கங்கள் ..
கிறுக்கப்பட்ட
சில பக்கங்கள் ..
கிழிக்கப்பட்ட
சில பக்கங்கள் ..
நீ
எந்த பக்கம்?
=================================
No comments:
Post a Comment