Saturday, January 12, 2013

ஏங்கும் நினைவுகள்


மலர்களால் பாதை விரித்தது தென்றல் 
மலர் கிண்ணத்தில் தேன் கொண்டு வந்தது மேகம் 
மலர் மாலையோடு காத்திருந்தது வண்ண மயில் 

மண்ணில்  மலர்ந்த தேவதையின் வாசத்தை 
விண்ணில் தேடியது நிலா 
விடை பெறும்போதும் 
தவித்து போனது வசந்த காலம் 

மலரில் தேனை உண்டு 
நினைவுகளை தூண்டி விட்டு 
கடந்து போனது ஒரு வண்டு 

காதல் பாதையில் விரித்த மலர்களும் 
கடந்து போகும் ஒவ்வொரு நாளும் 
கேட்டு கேட்டு சலித்தன 

விதையாய் விழுந்தது 
வாழ்கையாய் ஆனது 
இயற்கையின் நியதி இது 
இயல்பாய் சிரித்தது விதி 

இதயம் துடிக்கும் வரை 
துடிக்கும் உன் நினைவுகள் 

No comments:

Post a Comment