Friday, February 4, 2022

காதலர் தின கவிதை


நீட்டை ரத்து செய்யும் 

ரகசியத்தை கூட 

கண்டு பிடித்து விடுவேன் 

போலிருக்கிறது  ...

உன் நினைவுகளை 

ரத்து செய்யும் ரகசியம் 

தெரியவில்லை !


தயவு செய்து 

திரும்ப பெற்றுவிடு 

உன் 

நினைவுகளை 

ரத்து செய்ய மறுக்கும் 

உன் காதலை !


என் 

காதல் மழையும் 

பொழிகிறது 

நீ 

உள்ளங்கையில் 

தாங்கி கொள்வாய் 

என்ற 

ஆசையில் !


நரை கூடிப்போன 

தளர்ந்த வயதிலும் 

தளராத நாளிகையாய் 

நீயே வேண்டும் !


என் பகல்கள் 

உன் நினைவுகளையும் 

என் இரவுகள் 

உன் கனவுகளையும் 

உண்டு 

பசியாறுகின்றன !


இரும்பு 

கோட்டையாகத்தான் 

வைத்திருந்தேன் 

இதயத்தை ...

தூளாகி விட்டது 

ஒரு 

மலரின் மோதலில் !


காதலை 

கேட்டால் 

முறைக்கிறாய் ....

முறைக்க 

சொன்னால் 

காதலிப்பாயா !


இதய மாற்று 

அறுவை சிகிச்சை 

செய்து கொள்வோமா ...

அப்போதாவது 

உன்னை வெறுக்க என்னாலும்  

என்னை காதலிக்க உன்னாலும் 

முடிகிறதா பார்க்கலாம் ! 


உன் 

கன்ன சிவப்பை விட 

அழகான ரோஜாவைத்தான் 

இன்னமும் 

தேடிக்கொண்டிருக்கிறேன் 

உன்னிடம் நீட்டி 

காதலை 

சொல்வதற்கு !



நீ தரும் முத்தங்களை 

தான் வைத்துக்கொண்டு 

வெறும் 

சத்தங்களை மட்டும் 

தருகிறது 

அலைபேசி !



கன்னத்தில் 

குழி விழுந்தால் 

அதிர்ஷ்டம் என்றவர்கள்  ...

கன்னக் குழியில் 

விழுந்தால் 

என்னாகுமென்று 

சொல்ல மறந்தார்கள் !



நீ செல்லும் 

இடங்களை 

தவிர்த்து 

வேறு ஏதேதோ இடங்களை 

அழகான சுற்றுலா 

தலங்கள்  

என்று பட்டியலிட்டு 

ஏமாற்றுகிறது 

அரசின் சுற்றுலாத்துறை  !


உன் 

காதல் அலையில் 

தரை தட்டிய 

கப்பலாய் நான் !


===================================


உசுர தவிர 

எல்லாத்தயும் 

வாங்கிப்புட்டு 

ரவுசு பண்ணுது 

காதல் !


பல்லு மொளச்ச 

பட்டாம் பூச்சியா 

கடிச்சு 

கொதறுது 

காதல் !


ஊசி வெடியாலே 

மலையையே 

பொளக்குது 

காதல் !


===================================


எந்தன் 

கவிச்சோலையில் 

பொழிந்த 

மழைச்சாரல் 

நீ !


இதயத்தில் 

ஒலிக்கும்  

மௌன மொழி 

நீ !


கண் மூடி 

தேடும் 

காட்சி 

நீ !


என் நிழலும் 

பூசிக்கொள்ளும் 

நிறம் நீ  !


என் பாதையே 

தேடும் 

தேர் நீ !




No comments:

Post a Comment