Sunday, March 19, 2023

சிட்டு குருவி

 இரு வரி 

கவிதையாவது 

எட்டி பார்க்காதா 

என் காகிதத்தில் ...


நீ ....


சாளர கதவின் மீது 

எட்டி பார்த்தால் ! 



நெல்லின் 

விதைகளை 

தூவ 

காத்திருக்கிறேன் 


வருவாயோ ....


மகிழ்ச்சியின் 

விதைகளை 

என்னுள் 

தூவ !


நீ கால் நனைக்க 

காத்திருக்கின்றன 

சிற்றோடைகள்  


நீ கழுத்தை 

சிலுப்பிக்கொள்ளும் 

அழகை தேடி  

ஊரெங்கும் வீசுகிறது 

தென்றல் 


நீ சிறகடிக்க 

தன் இதயம் திறந்து 

பரந்திருக்கிறது 

வானம் ...


உன்னை போலவே 

நானும் 

தேடுகிறேன் 

அரிசி 

புடைக்கும் 

என் 

பாட்டியை !



காங்க்ரீட் கோபுரங்களால்

உன்னை 

தள்ளி வைத்தாரோ !


மரங்களை வெட்டி 

உனக்கு 

கொள்ளி வைத்தாரோ !


மின்காந்த அலைகள் 

உன்னை 

அள்ளி 

போயினவோ !


எங்கள் 

இதய மேடுகளில் 

அறிவியல் 

பூத்து விட்டதால் 

களத்து மேடுகளில் 

உனக்கான 

நெல்மணிகள் 

பூக்கவில்லை !


நீ

இல்லாது போனால்

எதிர்காலத்தில் 

மனித தினம் 

என்ற ஒன்றை 

பூச்சி இனம்  

கொண்டாடுமோ ! 

No comments:

Post a Comment