Friday, March 31, 2023

ரதியும் வந்தாள் ...

 வாங்கும்போது 

24 காரட்தான் ....


எப்படி கணக்கிடுவது 

நீ அணிந்தபின்பு 

எத்தனை காரட் என்று !! 

===================

எதற்கு 

ஹால் மார்க் முத்திரை ...

உன் கழுத்தில் 

இருப்பதே 

தங்கத்திற்கு 

தன்னிகரில்லா 

தர முத்திரைதானே !!

======================

வெட்கி போனது 

கோஹினூர் வைரம் ...

உனது   

இதழில் துளித்த 

பனித்துளி கண்டு !!

===================

மன்மதனின் 

ரதியும் வந்தாள் ...

அவள் அழகில் 

கொஞ்சம் 

கடன் வாங்கி 

சென்றாள் !!


ஊர்வசியும் 

ஓர் நாள் வந்தாள் 

அவளுக்கு 

தோழி ஆனாள் !!

================

மல்லிகைப்பூவே 

சிவந்ததேன் ....

மனதிற்குள் என்னை 

கசந்ததேன் !!

=================

ஆனந்தம் நீராடும் நதியா 

அலைகளில் காண்பது ரதியா 

கண்ணில் விழுந்தது விதியா 

காலதேவன் செய்த சதியா 

==============================

தென்றல் நடந்தது மெல்ல 

தேனாய் கவிதைகள் சொல்ல

தேனும் விஷமாய் கொல்ல


=================================

வண்ணங்கள் கூட்டும் அங்கமோ 

மெருகேறிய அழகு தங்கமோ 

எண்ணங்கள் அதில் தங்குமோ 

என்றும் கூட வர ஏங்குமோ 

==================================

உன் செந்தூரம் காட்டும் கலை 

என் நெஞ்சோரம் வீசும் வலை 

மயங்குது கோவில் சிலை 


==================================

நீ பேசும் 

சொற்களை 

தந்தது 

தமிழோ ...

அமுதமோ !!

==================================

வலிமையோடுதான் 

எழுதுகிறேன் ...

நீ 

தந்த வலி 

என் 

பேனாவுக்கு ஊற்றிய 

மையோடு !

=================================

ஒரே ஒரு 

வரம்தான் 

கேட்பேன் கடவுளிடம் ...

உன்னோடு இருந்த 

கடந்த கால 

பொழுதுகளை 

விலைக்கு வாங்குமளவு 

என்னை 

பணக்காரனாக்கி 

விடு என்று !!

================================

நாளைக்கென 

மிச்சம் இன்றி  

எல்லாம் சொல்லிவிட 

துடிக்கிறேன் ...


ஏதோ 

மிச்சம் வைத்து 

பிரிகிறேன் !!

====================================

உடல் 

இங்கேயே 

தங்கி விட்டது ...


பத்திரமாக 

பார்த்துக்கொள் ..

உன்னோடு 

வரும் 

என் உயிரை !!

=============================

இதயக்கோப்பையில் 

உன் நினைவுகள் 

தேநீராய் இனித்திருக்க 

இளைப்பாறுகிறேன் 

தனிமையில்...

=================================

என்ன 

கொடுமை இது ...


இதயத்தை 

திருடியவளிடமே 

மனு கொடுக்க 

வேண்டி இருக்கிறதே 

கண்டு பிடித்து 

கொடு என்று !

================================

கேள்விகள் 

நிறைய 

இருக்கின்றன 

என்னிடம் ...


பதிலாக 

நீ 

மட்டுமே 

இருக்கிறாய் !!

===========================

மதுக்குடத்தில் 

என்னை

அள்ளி போட்டது 

மது குடித்த 

இரண்டு கண்கள் 

================================

அட்சய திருதியையில் 

எது வாங்கினாலும் 

பல்கி பெருகுமாமே...

கொடுத்து விடு ...

ஓரக்கண்ணில்

இருக்கும் 

உன் காதலை !!

===============================

உந்தன் பார்வை மழை 

பொழியலாம் 

எந்தன் கவி மனது 

நிறையலாம் 

கனவுகள் கண்ணில் 

வரையலாம் 

கவலைகள் அதில் 

கரையலாம் 

================================

எழுதுவது இலக்கியம் என்றால் 

இலக்கணமாய் நீ 


வரைவது ஓவியம் என்றால் 

புள்ளிகளை நீ 


பாடுவது பாடல் என்றால் 

ராகமாய் நீ 


காதலே வாழ்க்கை என்றால்

நான் மடடும் ஏன் சோகமாய்

================================

ஒரு காதல் சாம்ராஜ்யம் 

கண்ணால் வரைந்தாள் 


இரு கண்களில்  நிழலாக 

கனவாய் கரைந்தாள் 

==============================



No comments:

Post a Comment