உன்
நினைவுகளை
தூண்டி
தூங்க விடாமல்
"கொல்லும்"
பாடல்களை
"அமுத" கானங்கள்
என்ற பெயரில்
ஒலிபரப்பி
கொண்டிருக்கிறது
சென்னை
வானொலி !
========================
நல்லதை
நினை
நல்லதே
நடக்கும்
என்றார்கள் ...
அதனால்தானே
நினைத்தேன்
உன்னை...!!
========================
மனம் என்ற
browser ல்
ஆயிரம் tab கள்
திறந்திருக்கின்றன ...
சில tab கள்
hang ஆகி விட்டன ...
அந்த
இசை மட்டும்
எந்த tab ல்
கேட்கிறதென்று
தெரியவில்லை !!
========================
மூன்று வயதில்
பொம்மை
உடைந்ததற்கே
அழுது புரண்ட
நான் ..
இன்று
அமைதியாகவே
இருக்கிறேன் ..
ஏதேதோ
இழந்த
பின்பும் !!
========================
படகானால்
ஒரு நாள்
கரை சேர
வேண்டுமே ...
அதனால்
ஆகி விட்டேன்
மீனாய் !!!
========================
வேப்பெண்ணை
வார்த்தைகளை
தேன் கலந்து
விற்று விட்டு
போய் விட்டாய் !
தேனான வாழ்க்கை
வேப்பெண்ணை
ஆகி விட்டது
எனக்கு !
========================
அடித்திருந்தால் கூட
வலித்திருக்காது...
நடித்திருந்தாய்....
வலிக்கிறது!!
========================
மறுத்துச் சொன்னாலும்
சிரித்துச் சொல்...
அந்த சிரிப்பில்
மறக்க முயற்ச்சிக்கிறேன்
மறுப்பின் வலியை !!
========================
எனக்கு
ஏன்
உன்னை பிடித்தது
என்று தெரியவில்லை...
கொஞ்சம்
கேட்டு
சொல்லேன்..
என்
இதயத்திடம். !!
========================
கும்பிட்டால்
முக்தி தருவேன்
போர்டு வைத்தார்
கடவுள் ...
கண்டு கொள்ளவில்லை
யாரும்...
கும்பிட்டால்
பணம் கொட்டும்
என்று
மாற்றினார் போர்டை...
அலைமோதியது
கூட்டம்!!
========================
அளவில்லா
அன்பை காட்டி
மயக்கி விட்டாய்
சிவனை ...
உன்னோடு
ஒப்பிட்டு
என்னை
அரக்கன்
என்கிறான்
அவன் !!!
========================
காலையில்
இரண்டு நிமிடங்கள்
மட்டும்
கடவுளுக்கு ஒதுக்கி
வேண்டிக் கொண்டேன் ..
ஒவ்வொரு வினாடியும்
என்னோடு இருந்து
காத்துவிடு ...
========================
உன்
இதயச்சிறையில்
இருப்பதைவிட
வேறென்ன
சுதந்திரம்
வேண்டும்
எனக்கு!!
========================
உன்னை
வர்ணித்து
நான்
அயர்ந்தாலும் ..
அயராது
போலிருக்கிறதே
தமிழ்!!
========================
அறிவியல்
அறிந்து
சொல்லுமோ...
உன்
விழி ஈர்ப்பு
சக்தியை!!
========================
உன்
கருவிழி மையால்
இதழ் வரி போட்டு
என்
இதய பக்கங்களில்
எதையெதையோ
நீதான்
கிறுக்குகிறாய் ..
கவிதை
என்ற
பெயரில் !
No comments:
Post a Comment