Thursday, October 12, 2023

ஜிமிக்கி

காதோர கூந்தலை 

ஒவ்வொரு முறை 

நீ 

சரி செய்யும்போதும் 

ஏங்கிப் போகிறது 

ஜிமிக்கி ...

தன் மீது 

உன் 

விரல் 

படாதா என்று !

========================

உன் 

ஜிமிக்கியை 

ரசிக்கவே 

நேரம் 

போதவில்லை 

எனக்கு ...

கற்பனை 

செய்து 

வந்ததையெல்லாம் 

எப்போது 

பேசுவது !

========================

கேட்டுச்சொல் 

உன் 

காது ஜிமிக்கியிடம் ...

என்னோடு 

போட்டிக்கு 

தயாரா என்று ...

பார்த்துவிடுவோம் ...

உன் கன்னத்தில் 

அதிகம் 

முத்தமிடுவது

யாரென்று !!

========================

நீ 

சொல்வதற்கெல்லாம் 

என்னைவிட 

அதிகமாய் 

தலையாட்டுகிறதே 

ஜிமிக்கி ...

என்னை விட 

உன்னை

அதிகம் 

காதலிக்கிறதோ!!

========================

நீ 

கண்ணாடி 

பார்க்கும்போதெல்லாம் 

அப்பாவியாய்

கர்வப்பட்டு 

கொள்கிறது ...

ஜிமிக்கி ...

தன்னால்தான் 

நீ 

அழகென்று !!

========================

என் 

கவிதை 

மழையை 

தடுத்து 

விடுகிறதோ ...

உன் 

ஜிமிக்கி 

குடை !

========================

கொல்லன் 

உலையிலும் 

ஜிமிக்கி 

ஏன் 

கலங்கவில்லை 

என்று 

புரிகிறது ...

உன் காதோரம் 

அது 

ஊஞ்சலாடும்போது !

========================

சேதாரம் 

குறைவென்று 

நீ வாங்கி 

மாட்டிக்கொண்ட 

ஜிமிக்கியால் 

சேதாரம் 

அதிகம்தான் ...

பல 

இதயங்களுக்கு !

========================

கொஞ்சம் 

இறக்கிவிடு 

உன் 

ஜிமிக்கியில் 

சிக்கிக்கொண்ட 

என் 

கவிதைகளை !ர



புயல் மழை

வாழையிலை குடை பிடித்து 

தளிர்  நடை நீ போடையிலே !


சாரல் மழையின் கானத்துக்கு 

கொலுசு தாளம் போடையிலே !


நடுங்க வைக்கும் இடியோசைக்கு 

கருவிழி கரகம் ஆடையிலே !


மயக்கும் உன் புன்னகைக்கு 

மின்னலும் கண் மூடையிலே !


சாரல் மழையும் காதல் கொண்டு 

உன் எழில் காண ஏங்கிடுமோ !


வெட்கம் விட்டு சிறு மழையும் 

புயல் மழையாய் ஓங்கிடுமோ !

அவன்

~
நான் வெறும் கால்களில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது,
அவன் ஷூ அணிந்து கொண்டு பள்ளி வேனில் இருந்து எனக்கு டாட்டா காட்டியவன்..

நான் தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது,
அவன் புதிதாய் வாங்கிய MRF கிரிக்கெட் மட்டையுடன் உலா வந்தவன்..

நான் என் சைக்கிளுக்கு காற்றடிக்க காசில்லாமல் அலைந்த போது,
என் முன்னால் புதிய Bike க்குடன் 
வந்து நின்றவன்..

நான் எழுத்துக்கூட்டி தமிழ் படித்து கொண்டிருந்தபோது,
அவன் கவிதைகளை எழுதியவன்..

நான் ஒரு பெண்ணிடம் காதலை சொல்லத் திணறிக் கொண்டிருந்த போது,
பல பெண்களால் ஒரு தலையாய் காதலிக்கப் பட்டுக் கொண்டிருந்தவன்..

நான் கையேந்தி பவனில் சாப்பிட்டு கை கழுவிக் கொண்டிருக்கும் பொழுது,
அவன் எதிரே இருந்த சரவண பவனில் இருந்து எனக்கு கையசத்தவன்..

நான் வீட்டுக் கடனுக்காக வங்கியில் காத்துக் கொண்டிருந்த போது,
அவன் கை நிறைய பணக் கட்டுகளை Deposit செய்து கொண்டிருந்தவன்..

நான் விடுமுறைக்கு என் ஊருக்கு
Train ஏறிய போது, 
அவன் Vocation க்காக வெளிநாட்டுக்கு Flight பிடித்துக் கொண்டிருந்தவன்..

..........

அவன் வேறு யாரும் அல்ல..

நான் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று நான் கண்ட கனவுகளின் 
விம்பம் அவன்..

இதுவரை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை..

என்றோ ஒரு நாள் இருவரும் 
ஒரு புள்ளியில் சந்திப்போம் என்ற 
அதீத நம்பிக்கையில்..

அன்று வரை,

நானும் அவனும் தினமும் கனவில் நிறைவேறாத ஆசைகளைப் பற்றி 
கதை பேசிக் கொள்வோம்..

📌 அந்த உரையாடல் போதும் எனக்கு...
Copy paste

Wednesday, October 4, 2023

காத்தோட பறக்குதடி

 வெட்ட வெளி காட்டுல 

பொட்ட வெயில் பாராம 

நட்டு வச்ச நாத்தெல்லாம் 

கொட்டும் ;மழையில் அவியுதடி !


வியர்வை நீரை சிந்தி சிந்தி 

பயிரை வைத்து காத்திருந்தா 

தண்ணீரை கொட்டும் வானம் 

கண்ணீரையும் கேட்குதடி !


கொத்து கொத்தா வெளஞ்சதெல்லாம் 

சேத்துல சாஞ்சு கெடக்கயிலே

சேத்து வச்ச கனவெல்லாம் 

காத்தோட பறக்குதடி !!