வாழையிலை குடை பிடித்து
தளிர் நடை நீ போடையிலே !
தளிர் நடை நீ போடையிலே !
சாரல் மழையின் கானத்துக்கு
கொலுசு தாளம் போடையிலே !
நடுங்க வைக்கும் இடியோசைக்கு
கருவிழி கரகம் ஆடையிலே !
மயக்கும் உன் புன்னகைக்கு
மின்னலும் கண் மூடையிலே !
சாரல் மழையும் காதல் கொண்டு
உன் எழில் காண ஏங்கிடுமோ !
வெட்கம் விட்டு சிறு மழையும்
புயல் மழையாய் ஓங்கிடுமோ !
மேகத் துணியைப்
போர்த்திக் கொண்டு
மெல்ல மெல்ல
நீ நடக்கையிலே!
மண் வாசனையும்
உன் பாதம் தொட்டு
மலர்வாசமாய்
மாறிடுதே!
துளி துளியாய்
உன்மேல் விழும் மழை
முத்தம் கேட்கும்
குழந்தையோ!
காற்றும் கூட
உன் கூந்தலோடு
காதல் பேசும்
கவிஞனோ!
உன் விழி சிந்தும்
ஒரு மின்னலிலே
வானத்தின் மின்னல்
வெட்கம் கொள்ளுதோ!
உன் இதழ் சிந்தும்
சிறு சிரிப்பினிலே
வானவில் கூட
நிறம் மறந்ததோ!
உன்னை நனைக்க
வந்த மழைக்கே
உன்மேல் காதல்
வந்ததோ !
அதனால்தானோ
சாரல் எல்லாம்
அடங்க மறுத்துப்
பெருமழையாய்
பெய்கிறதோ!
No comments:
Post a Comment