Thursday, October 12, 2023

அவன்

~
நான் வெறும் கால்களில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது,
அவன் ஷூ அணிந்து கொண்டு பள்ளி வேனில் இருந்து எனக்கு டாட்டா காட்டியவன்..

நான் தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது,
அவன் புதிதாய் வாங்கிய MRF கிரிக்கெட் மட்டையுடன் உலா வந்தவன்..

நான் என் சைக்கிளுக்கு காற்றடிக்க காசில்லாமல் அலைந்த போது,
என் முன்னால் புதிய Bike க்குடன் 
வந்து நின்றவன்..

நான் எழுத்துக்கூட்டி தமிழ் படித்து கொண்டிருந்தபோது,
அவன் கவிதைகளை எழுதியவன்..

நான் ஒரு பெண்ணிடம் காதலை சொல்லத் திணறிக் கொண்டிருந்த போது,
பல பெண்களால் ஒரு தலையாய் காதலிக்கப் பட்டுக் கொண்டிருந்தவன்..

நான் கையேந்தி பவனில் சாப்பிட்டு கை கழுவிக் கொண்டிருக்கும் பொழுது,
அவன் எதிரே இருந்த சரவண பவனில் இருந்து எனக்கு கையசத்தவன்..

நான் வீட்டுக் கடனுக்காக வங்கியில் காத்துக் கொண்டிருந்த போது,
அவன் கை நிறைய பணக் கட்டுகளை Deposit செய்து கொண்டிருந்தவன்..

நான் விடுமுறைக்கு என் ஊருக்கு
Train ஏறிய போது, 
அவன் Vocation க்காக வெளிநாட்டுக்கு Flight பிடித்துக் கொண்டிருந்தவன்..

..........

அவன் வேறு யாரும் அல்ல..

நான் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று நான் கண்ட கனவுகளின் 
விம்பம் அவன்..

இதுவரை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை..

என்றோ ஒரு நாள் இருவரும் 
ஒரு புள்ளியில் சந்திப்போம் என்ற 
அதீத நம்பிக்கையில்..

அன்று வரை,

நானும் அவனும் தினமும் கனவில் நிறைவேறாத ஆசைகளைப் பற்றி 
கதை பேசிக் கொள்வோம்..

📌 அந்த உரையாடல் போதும் எனக்கு...
Copy paste

No comments:

Post a Comment