Sunday, December 3, 2023

பட்டாம்பூச்சி

 ஒரே ஒரு 

பட்டாம்பூச்சியைத்தான் 

பார்த்தேன் 

தோட்டத்தில் ...


இறக்கை 

கட்டி கொண்டன 

நினைவுகள் !!

==============

இரண்டே 

நிறம் கொண்ட 

மனிதர்களிடையே 

எத்தனை 

நிறவெறி ...


பல வண்ணங்களுடன் 

நிறவெறியை 

உன் இனம் 

எப்படி 

சமாளிக்கிறது 

பட்டாம்பூச்சியே !!


ஒவ்வொருவரும் 

தனி 

இனமோ ?

========

உன்னை 

துரத்தித்தான் 

ஓட

கற்றுக்கொண்டேன் ..


இன்னமும் 

நிற்க 

முடியவில்லை !!

==========

சோம்பேறி 

பிரம்மன் ...


ஒரு 

சிறகினை 

படைத்துவிட்டு 

இன்னொன்றினை 

செராக்ஸ் 

எடுத்து 

விட்டானே !

==============

நினைவுகள் 

உன்னைப்போல 

சுதந்திரமாய் 

பறக்க ...


சிறைப்பட்டு 

கிடக்கிறேன் 

நான் !!

==============

எங்கே 

பிடித்தாய் 

இந்த 

ஏழு வண்ண 

சிறகினை ...?


என் 

நினைவு 

சிறகுகளுக்கு 

எப்போதுமே 

ஒரே வண்ணம்தான் !!

==============

தேடாதே !


எந்த 

பூவிலும் 

காணமாட்டாய் ...


என்னவளின் 

வாசம் !!

==============

உன்னை 

போல அல்ல ...


ஒரே ஒரு 

பூவின் 

நினைவுகளை 

நுகர்வதிலேயே 

சமாதானமாகி 

விடுகிறது 

எனது 

மனது !!

===========

எனது 

கவிதை 

புத்தகத்தையே 

சுற்றி 

வருகிறது 

ஒரு 

பட்டாம்பூச்சி ...


அவளை  

பற்றி 

மட்டுமே 

எழுதியதால் !!

==========

உன்னை 

பார்க்கும்போதெல்லாம் 

தோன்றி 

போகிறது ...


குழந்தையாகவே 

இருந்திருக்கலாம் !!

============

புதிய 

வண்ணங்களை 

பின்னி 

மீண்டும் மீண்டும் 

வருவாயா ...


நான் 

புதிது புதிதாய்  

கவிதை 

பின்ன 

வேண்டும் 

No comments:

Post a Comment