Sunday, December 3, 2023

கோபுரத்தருகே

எப்போதும் 

தலைகுனிந்தே 

நடக்கும் 

உன் 

முகம் காண 

காத்திருக்கிறேன் 

கோபுரத்தருகே ...


நிமிர்ந்து 

பார்த்து

கும்பிடாமலா

போய் 

விடுவாய் !!

====≈============

நாத்திகனாகத்தான் 

இருநதேன்...


கோபுர வாசலில் 

உன்னை 

காணும்வரை !!

=========================

ஊதுவத்தியில் 

ரசாயனம் 

கலக்கிறார்களாம்...


பாவம் 

கடவுள்!!

==========================

கோவில் யானைக்கு 

மதம்

பிடித்தது...


எந்த

மதமென்று 

யாருக்கும் 

தெரியவில்லை!!

======================

கண்ணில்

தெரியாத

ஒன்றை

கடவுள்

என்கிறாய் ...


கண்ணில்

தெரியும்

என் காதலை 

ஏன்

மறுக்கிறாய்!??

==================

இறப்புக்கு பின் 

இறைவன் 

இல்லையென்றால் 

பிரச்சினையில்லை ...


இருந்து 

விட்டால் ...


கடைசி 

பெஞ்சில் 

உட்கார 

வைத்து 

விடுவானோ !!

=================

மனிதன் 

மட்டுமல்ல ...


சில 

ஜாதி 

பூக்களும் 

இன்னமும் 

வெளியேதான் !!

=================

இன்னமும் 

புரியவில்லை ..


நீ 

என் 

பாவமா ...

புண்ணியமா !!

==============

ஒவ்வொரு 

அணுவிலும் 

இருக்கிறானாமே 

இறைவன் ...


எனது 

ஒவ்வொரு 

அணுவிலும் 

அவனா ...

நீயா !

=============

காமத்தின்போது 

தெரியாத 

அருவருப்புகள் 

அவள்

காதலோடு

சமைக்கும் 

உணவில் 

கிடக்கும் 

ஒரு

தலைமுடியில் 

தெரியும்!!

=========================

No comments:

Post a Comment