Tuesday, December 10, 2019

மழை நீரில்

மழை நீரில் நூலெடுத்து
பனி நீர் பூ தொடுத்து
கூந்தலிலே வச்சு விடவா ?

நினைவினிலே நூலெடுத்து
கனவுகளை பஞ்சாக்கி
மெத்தையாக தைத்து தரவா ?
---
மயங்கும் விழிகள் வழி காட்டும்
மயக்கத்தில் வாலிபத்தை சூடேற்றும்

காதல் விழிகள் காமம் கூட்டும்
மயக்கத்தில் சொர்க்கத்தின் படியேற்றும்

(மழை நீரில் நூலெடுத்து )

மயக்கத்திலே முத்தம் ஓன்று தாராயோ !
தயக்கமென்ன தாகம் தனை தீர்ப்பாயோ !

இனிக்கும் இதழிலே தேன் கண்டேன்
தவிக்கும் மோகத்திற்கு விடை கண்டேன்

(மழை நீரில் நூலெடுத்து )

நீங்கள் யார்

மனிதர்களிடமிருந்து வெளிப்படுபவை வார்த்தைகள்
மகான்களிடமிருந்து வெளிப்படுபவை உண்மைகள்

இரும்பு சங்கிலியால் பிணைக்கப்படுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.
தங்கம் விலை மதிப்பற்றது ... எனில் ... தங்க சங்கிலியால்
பிணைக்க படுவதை நீங்கள் விரும்புவீர்களா ?

அதுபோல, தீய எண்ணங்களால் மட்டுமல்ல
நல்ல எண்ணங்களாலும் உங்கள் மனது பிணைக்க பட
இடம் கொடுக்காதீர்கள்.
தீயவற்றிடமிருந்து மட்டுமல்ல நல்லவற்றிடமிருந்தும்
உங்கள் மனது விலகி இருக்கட்டும்.

உங்களுடைய எண்ணங்கள் மட்டுமே
உண்மையான உங்களை
உங்களுக்கு காட்டும்.

உங்களால் கட்டு படுத்த முடியாத
உங்கள் மனதினுள் இறைவன் எப்படி நுழைய முடியும் ?

உங்கள் எண்ணங்களுக்கு உருவமில்லை.
ஆனால் எண்ணங்களின் விளைவுகளான செயல்களுக்கு உருவமுண்டு.
செயல்களில் கவனமாக இருங்கள்.

எண்ணம் உருவாகும்போதே நீங்கள்
அதனை கண்காணிக்க தொடங்கி விட்டால்
எண்ணம் உங்களுக்கு அடிமை ..
விட்டுவிட்டால் எண்ணத்திற்கு நீங்கள் அடிமை.

செயல்களின் மூலம் எண்ணமே!.
எண்ணம் தெளிந்ததெனில் செயலும் தெளிவாகும்.
தெளிந்த செயலின் விளைவை பற்றி
நீங்கள் கவலை கொள்ள
தேவையில்லை.


.நீங்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகளே
நீங்கள் யார் என்பதை
உலகிற்கு வெளிப்படுத்துகின்றன

மனிதனுடைய சக்தியை வீணடிப்பவை இரண்டு.
முதலாவது நாக்கு .
இரண்டாவது கண்கள்.

விளக்கு

இல்லத்தில் விளக்கேற்றுங்கள்
புற இருள் அகலும்
இவ்வுலகில் வாழ்வு பிரகாசமாகும்

உள்ளத்தில் இறைவனை ஏற்றுங்கள்
அக இருள் அகலும்
அவ்வுலக வாழ்வு பிரகாசமாகும்


மூத்தோர் சொல்லும் அறிவுரைகள்
நெல்லிக்கனி போன்றவை
முதலில் கசப்பது போல் தோன்றும்
முடிவில் இனிக்கும் 

வெங்காயம்

இரண்டு மனம் வேண்டும் மெட்டில் பாடி மகிழ்க உள்ளி = வெங்காயம்

இரண்டு உள்ளி வேண்டும்
இரக்கத்தோடு கேட்டேன்
சாம்பாருக்கு ஒன்று
பச்சடிக்கு ஒன்று
(இரண்டு உள்ளி வேண்டும்)

சாம்பாரும் சட்னியும் இரண்டானால்
துவரனும் துவையலும் இரண்டானால்
பச்சடியும் கிச்சடியும் இரண்டானால்
பச்சடியும் கிச்சடியும் இரண்டானால்
உள்ளி ஒன்று போதாதே
(இரண்டு உள்ளி வேண்டும்)

இட்லிக்கு சாம்பார் ருசியானால்
சோத்துக்கும் சாம்பார் ருசியானால்
பிரியாணிக்கு பச்சடி ருசியானால் ...
பிரியாணிக்கு பச்சடி ருசியானால்
உள்ளி ஒன்று போதாதே
(இரண்டு உள்ளி வேண்டும்)

உருளைகிழங்கால் ஃகேஸ் வரும்
மிளகாய் தின்றால் அல்சர் வரும்
உள்ளியின் விலையை கேட்டாலோ ...
உள்ளியின் விலையை கேட்டாலோ
கண்ணிரண்டில் கண்ணீர் வரும்
(இரண்டு உள்ளி வேண்டும்)

Sunday, December 1, 2019

கீழ்வானம் சிவந்தது


கீழ்வானம் சிவந்தது !
தூக்கம் கலைத்தன கதிரவன் கதிர்கள் !

கொஞ்சி பேசும் கிளியே!
வஞ்சியவள் துஞ்சி எழுந்தாளா என்று
கொஞ்சம் கண்டு வருவாயா?

வயல் நாற்றுகளை தாலாட்டும் தென்றலே !
கயல் விழியாள் கண் விழித்தாளா என்று கேட்டு வருவாயா?

துடிக்கும் கன்னத்தில் அவள் அனபின் எச்சமிருக்கிறது !

கொதிக்கும் நெஞ்சினில் அவள் மார்பின் சூடு இன்னும் மிச்சமிருக்கிறது !

சிணுங்கும் அவள் வளையோசை
செவிகளில் இன்னமும் கேட்கிறது!

மயக்கும் அவள் குரலோசை
மனதை இன்னமும் மயக்குகிறது!

பிரியும் நேரத்தில்
அவள் கண்களில் கண்ட கலக்கம்
இன்றும் கலங்க வைக்கிறது

கொன்றையும் பூத்தது
வசந்தமும் வந்தது

காலதேவனே!
இரு மனம் கலந்தவர்களை
வேறாக்கிய பாவம் உனக்கெதற்கு!

அவளை என்னிடத்தில் சேர்த்து விடு
இன்றேல்
என்னை அவளிடத்தில் கொண்டு போய்விடு