தவம் கலைத்தவன்
தையலை நோக்கினான்...
தையலை நோக்கினான்...
நெற்றிக்கண் நெருப்பு
பனித்துளியானது!
மரங்கள் துளிர்த்தன...
மலர்கள் மலர்ந்தன...
தென்றல் தவழ்ந்தது...
பிரபஞ்சத்தின்
முதல் காதல்
பிறந்தது —
வசந்தமாய்!நிலவின்
குளிர்ச்சி எதுவோ?
சூரியனின்
வெப்பம் எதுவோ?
மலர்களின்
சுகந்தம் எதுவோ?
தண்ணீரின்
தண்மை எதுவோ?
ஆடலரசனை
ஆடவைக்கும்
அந்த சக்தி எதுவோ?வசந்த காலம்
ஒரு பருவம் என்றால்...
அன்புக்காலம்
எந்தப் பருவமோ?மலர்கள் மலர
வசந்தம் வேண்டும்...
மனம் மலர
அன்பு போதாதோ?
தென்றல் வீச
வசந்தம் வேண்டும்...
இதயம் வீசும்
அன்புக்கு
பருவம் வேண்டுமோ?நிலவு உதிக்க
இரவு வேண்டும்...
காதல் பிறக்க
நேரம் வேண்டுமோ?
வசந்தம் வரும்போது
மலர்கள் மலரலாம்...
ஆனால்...
அன்பு பிறக்கும் இடமெல்லாம்
வசந்தம் வருகிறதே !
அன்பினை வெளிப்படுத்த
வசந்த காலமும்
வேண்டுமோ?
No comments:
Post a Comment