எனக்கு தெரியும்
என்னை மட்டுமல்ல
என் கவிதைகளையும்
நீ விரும்ப மாட்டாய் என்று ...!
ஆனால் ......
உனக்கு தெரியுமா ... !!!?
நான் மட்டுமல்ல
என் கவிதைகளும்
உன்னை விரும்புகின்றன !!!!
==============================
என் கவிதைகளை நினைக்கும்போது
எனக்கே பொறாமையாக இருக்கிறது
....
என்னை காணும்போது
புன்னகை கூட
சிந்தாத உன் உதடுகள்
என் கவிதைகளை படிக்கும்போது
கேலி புன்னகையாவது
சிந்துகிறதே
============================
எப்படி நான்
ஒப்பு கொள்ள முடியும் ... !!?
கம்பனும் காளிதாசனும்
கவிஞர்கள் என்று ....!!!
உன்னை பாடவில்லையே அவர்கள் ... !!!
கால தேவனுக்கு
அவர்கள் மேல் என்ன கோபம் ... !!?
உன்னை தாமதித்து படைத்து விட்டானே !!!!
===================================
மொட்டை மாடி ....
நிலவில் உன்னை கண்டேன் ....
கிறுக்கினேன் சில வரிகள் ....!!!
மின்னல் அடித்து
படித்து பார்த்தது வானம் ...
மேகங்களை அனுப்பி
கண்ணீர் சிந்தியது ...
கூடவே
இடியாய்
நகைக்கவும் செய்தது ...
ஹ்ம் .... வானமும் உன்னைபோலத்தான்
==============================
அவள் சொன்னாள் ...
உன் கவிதைகள்
புல்லரிக்க செய்கிறது ....
ஒரு வேளை ...
அவை ...
செல்லரித்த என்
மனதில் இருந்து
பிறந்ததாலோ ....!!!?
=============================
பேனா மையோடு
உன் நினைவுகளையும்
ஊற்றி எழுதினேன் ..
.....
உன் பெயரை தவிர
எதையும் எழுத
மறுக்கிறது ....!
============================
No comments:
Post a Comment