Friday, January 1, 2021

கோலம்

புள்ளிகளை சேத்து வச்சு
கோலம் போட்டு ரசிப்பவளே 
எந்தன் வீட்டு வாசலிலும் 
உந்தன் கோலம் வருமோடி 
வெட்டி போட்ட விரல் நகமும் 
பிறை நிலவா தெரியுதடி 
பொட்டு வச்ச தங்க முகம்  
பௌர்ணமியா ஜொலிக்குதடி 
அழகு மதி உன்னை கண்டு  
அர்ச்சகர் குழம்பி போனாரடி 
பௌர்ணமி திதி இன்னைக்குன்னு 
பூஜையும்தான் ஆலயத்தில் நடக்குதடி 




No comments:

Post a Comment