கட்டுக் கரும்பு நான் தாறேன்
சுள்ளி கட்டு நீ சுமந்தா
பற்றி எரியுமென் நெஞ்சமடி
கல்லு கூட்டி அடுப்பு மூட்ட
மெல்ல நானும் வாறேண்டி
பானைக்கு மஞ்சள் கட்டிப்புட்ட
கழுத்துக்கு மாமன் தாறேண்டி
சாந்து பொட்டு வடிவழகி
சேந்து சமைப்போம் பொங்கலடி
பொங்கல் கொழஞ்சு போச்சுதுன்னா
மாமனுக்கு பொங்கல் சோறே நீதாண்டி
No comments:
Post a Comment