பொறாமையில் ஆடுகிறது
உன் காது கம்மல் ...
உன் மார்பில் தவழும்
தங்க சங்கிலியை
பார்த்து !
நான்
காதலை விதைக்க
வரும்போதெல்லாம்
உனது மனம்
தரிசாகி விடுகிறதே !
நீ
ஐம்பது கிலோ
தாஜ்மகாலாம் ...
என் காதலுக்கு
உன் இதயத்தில்
சமாதி கட்டியிருப்பதாலா !!
நான்தான்
யுத்தம் இன்றியே
உன்னிடம்
தோற்று விட்டேனே !
பிறகு ஏன்
நினைவுகளை அனுப்பி
என்னோடு
நிழல் யுத்தம்
செய்கிறாய் !
No comments:
Post a Comment