கருவிழி மையூற்றி
இதழ் வரியால்
இதய ஏட்டில்
எழுதுகிறாய் கவிதை தினம் !
மன மொழி மெய்யால்
கொஞ்சி அமுதிடவே
வாராமல் போனாலோ
நானோர் நடை பிணம் !
உன் கனவே அறம்
உன் நினைவே பொருள்
இன்பத்து பாலும் நீயன்றோ !
காதலெனும் அறத்தில்
வாழ்வின் பொருள் காண
பூவுலகின் இன்பமே வாராயோ !
No comments:
Post a Comment