வாய் பொத்தி நிற்கிறது
ஏழு ஸ்வர மெட்டு
எட்டாம் ஸ்வரமாய்
உன் கொஞ்சும் மொழி கேட்டு !
அறுசுவை மட்டுமே உண்டென
எண்ணியிருந்தேன் ...
ஏழாம் சுவையாய்
உனது சமையலை
சாப்பிடும் வரை !
கடிவாளமில்லாமல்
அங்குமிங்கும் அலைகிறது
எனது கற்பனை குதிரை ...
நீ சவாரி செய்வதால் !
நீ மஞ்சள் பூசி குளிக்கும்போதுதான்
மஞ்சள் தூளுக்கே
நடக்கிறது ...
மஞ்சள் நீராட்டு விழா !
தமிழுக்கே சொற்பஞ்சமா ...
நீ போட்டு தந்த பானத்திற்கு
தேன்நீர் என்பதை விட
உயர்வான சொல்
கிடைக்க மாட்டேனென்கிறதே !
உன் நினைவுகளை
சேமிக்கும்போது மட்டும்
அன்லிமிடெட் ஸ்பேஸ் அவெய்லபிள்
என்று காட்டுகிறது
எனது மனது !
வண்ணத்து பூச்சியொன்று
தோட்டத்தில்
நடை பழகி கொண்டிருந்தது
உன்னை போல்
ஆக வேண்டுமாம் !
No comments:
Post a Comment