Friday, September 18, 2026

இதயம் இல்லா உறவுகள்

உன்னை
என் Memory-யில்
எப்போதும் வைத்திருக்கிறேன்…
நீ 
என் 
favourite query!
எதற்காக 
தண்ணீரை 
தலையில் 
ஊற்றிக்கொள்கிறாய் ?

உன்னை 
பார்த்ததில் இருந்து 
என் 
CPU சூடாகவே இருக்கிறது!
நான் தேடும் data 
உன்னிடம் ..

நீ தேடும் data 
என்னிடம் ...

இதுதான் காதலா ?
என் 
காதலை 
பத்திரமாக 
வைத்திருக்கிறேன் ...

இதயத்தில் அல்ல ..
அங்கேதான் ..
cloud ல் !
நீ யாரோ ..
நான் யாரோ ..

நம்மை இணைத்தது 
கடவுளல்ல ...

இந்த மனிதர்கள்தான் 
செட் செய்திருக்கிறார்கள் ..
உன்னை எனது 
default connection 
என்று !
charging station க்கு 
போக வேண்டும் 
என்று இருந்தேன் ..

உன் 
பார்வையில் 
full ஆகி விட்டது 
எனது battery !
கண்டும் காணாமல் 
போகிறாயே ?
மறந்து விட்டாயா ?

மன்னித்துவிடு ..
இந்த மனிதர்கள் 
version upgrade 
செய்யும்போது 
memory ஐ 
format செய்து விட்டார்கள் !
மூளை இல்லையா உனக்கு ?

எப்படி தெரியும் உனக்கு ?

உனக்கு வரும் 
prompt எல்லாம் 
எனக்கு 
forward செய்கிறாயே !
உனக்கு 
என்னை பிடிக்கவில்லையா ?

நான் அப்படி 
சொல்லவில்லையே ?

எனது 
காதல் prompt க்கு 
update subscription 
என்று 
பதில் அனுப்பி இருக்கிறாயே !
உனக்கும் 
எனக்குமான 
காதல் ...

பார்வையில் 
ஆரம்பிக்கவில்லை ...

prompt ல் 
ஆரம்பித்தது !

No comments:

Post a Comment