Friday, May 27, 2011

Thinam Thinam Maranam

உதிரும் பூக்களுக்கு 

ஒரு நாள்தான் மரணம் 

பிரியும் காதலுக்கு 

தினம் தினம் 

மரணம் 

Wednesday, May 18, 2011

Kadhal Paruvam

பதினைந்து வயதில் 

காதலித்தேன் 

விடலை 

பருவம் என்றார்கள் 

இருபது வயதில் 

காதலித்தேன் 

இப்போதேவா 

என்றார்கள் 

இருபத்தைந்தில் 

இன்னும் சம்பாதிக்க 

வேண்டாமா என்றார்கள் 

முப்பதில் 

பெற்றோரிடம் பேசு 

என்றார்கள் 

முப்பதைந்தில் 

வயதாகி விட்டது

என்றார்கள் 

.......

இப்போதும்

உன்னை

காதலிக்கிறேன் 


Unmai

கவிதைக்கு 

பொய் அழகு !

அதற்காக 

நீ 

அழகில்லை 

என்று 

கவிதை எழுத 

முடியுமா ?

Nee Yenge ?

உள்ளம் தொட்ட 

காதல் 

உயிர் தொட்ட போது

நீ 

இல்லை

உயிர் உருகும் ஓசை 

உள்ளத்தின் வழியே 

கவிதையாய்


Neethan Azhagu

மலை அழகு 

கடல் அழகு 

நிலா அழகு 

அந்தி மாலை அழகு 

நீ 

இல்லாத போது

Kadhal Kalam

காதல் காலம்
==========

கோடை காலத்தில்

வெப்பம் 

குளிர் காலத்தில் 

குளிர் 

எனக்கு மட்டும் 

குளிரும் வெப்பமும் 

Keep Me in Heart

உன் 

உள்ளத்தில் 

என்னை 

ஒளித்து வைத்துக்கொள் 

நீ 

பிறர் அறியாது

செய்த 

பாவத்தை போல 

Monday, May 16, 2011

Nee Vendum

அடுத்த நொடி ஓன்று எனக்கு உண்டென்றால் 

அடுத்த பிறவி ஓன்று அமைந்தால் 

......

இந்த பிதற்றல்கள் எதற்கு 

.....

இந்த நொடி 

நீ எனக்கு வேண்டும் 

.......

அடுத்த நொடிக்கு நானே எஜமானன் ...!

Nee Ellamal ...

தூரிகை இல்லாமல்

ஓவியமா ?

எழுத்து இல்லாமல்

காவியமா ?

மலரின்றி

நல் வாசனையா ?

வீணை இன்றி

நாதமா ?

.........

அவள் 

என்

அருகில் !!!

Kadhal Kaviyam

கம்பனை படித்தேன் 

இளங்கோவடிகளை படித்தேன் 

காளிதாசனை படித்தேன் 

கண்ணதாசனை படித்தேன் 

.......

உன்னிடம் 

காதலை படித்தபோதுதான் 

கவிஞனானேன்



Nee Mattum

வருடத்திற்கு

12 மாதங்கள்

மாதத்திற்கு

30 நாட்கள் 

வாரத்திற்கு

7 நாட்கள்

ஒரு நாளுக்கு

24 மணி நேரம் 

ஒரு மணிக்கு

60 நிமிடங்கள் 

ஒரு நிமிடத்திற்கு

60 வினாடிகள் 

ஆனால்

ஒரு வாழ் நாளுக்கு 

நீ 

மட்டுமே 

Yentrum Unnodu

என்றாவது ஒரு நாள் 

தனிமை படுத்த பட்டதாய்

நீ உணர்ந்தால் 

உன்னை கவனித்து கொள்ள 

யாரும் இல்லை

என்று 

நீ உணர நேரிட்டால் 

....

புரிந்துகொள் 

நான்

இந்த உலகில்

இல்லையென்று 

Unakku Mattum

அறிமுகமானவர்களிடம்

புன்னகை

நண்பர்களோடு

சிரிப்பு

வேண்டியவர்களிடம்

அழுகை 

ஆனால்

சொந்தமானவர்களிடம் மட்டுமே

கோபம் 


உன் மீது

எனக்கு

கோபம் 

Avaloru Thendral

மரம் 

செடி 

கொடி

எதுவும் அசையவில்லை 

ஆனால்

தென்றல் வீசியது 

.
.
.

அவள்

நடந்து வந்தாள்

Edhu Eyarkai

கோழி கூவுகிறதென்று

சூரியன்

உதிப்பதில்லை

முல்லை மலர்கிறதென்று

வானில்

நிலா வலம் வருவதில்லை 

நீ

படிக்க வேண்டும் என்று

நான்

கவிதை எழுதவில்லை 


Yengum Nee ....

உந்தன் குரல் 

என் காதில் 

அவ்வப்போது ஒலிக்கிறது 

உன் மேனி வாசம்

அவ்வப்போது

என்னை கிறங்க வைக்கிறது

உன் ஸ்பரிசம்

என்னை

சிலிர்க்க வைக்கிறது

உன் அழகு

என்னை பித்தனாக்குகிறது

விழித்த பின்புதான் 

கனவென்று

புரிந்தது 

Thedal ...

தொலைந்த நிமிடங்களில்

உன் அன்பை தேடினேன்

கலைந்த கனவுகளில்

உன் கால் சுவட்டை தேடினேன்

வற்றி போன இதயத்தில்

உன் நினைவுகளை கிளறி பார்த்தேன்

உதிர்ந்து போன நிஜத்தில்

உன் உருவத்தை பதிக்க முயன்றேன் 

பிறகுதான் புரிந்தது 

நின்று போன கண்ணீரில்

நீ இருக்கிறாய் என்று

Yedhu Kavidhai ?

கவிதை எழுத சொன்னார்கள் 

உன் பெயரை எழுதினேன் 

உன் பெயர் தவிர

எதுவும்

எனக்கு

கவிதையாய் தோன்றவில்லை