ஜாலம் காட்டும் பாவை விரல்கள்
புவியின்மீது நடனம்
வர்ண ஜாலம் காட்டும்
அழகு கோலம் ஜனனம்
===============================
க்ரைம் சைபர் ஆக வேண்டும்
என விரும்பியது அந்த காலம்
சைபர் க்ரைம் உருவாகி
மிரட்டுவது இந்த காலம்
=================================
ஜாலம் காட்டும் பாவை விரல்கள்
புவியின்மீது நடனம்
வர்ண ஜாலம் காட்டும்
அழகு கோலம் ஜனனம்
===============================
க்ரைம் சைபர் ஆக வேண்டும்
என விரும்பியது அந்த காலம்
சைபர் க்ரைம் உருவாகி
மிரட்டுவது இந்த காலம்
=================================
என் வாழ்க்கை கடிகாரத்தை
ஓட வைப்பது
நொடி முள்ளோ
நிமிட முள்ளோ
மணி முள்ளோ அல்ல
உனது
காதல் முள் தான் !
கண்ணாடி போன்றவன் இறைவன்
நீ விருப்பு காட்டினால் அவனும்
வெறுப்பு காட்டினால் அதையும்
பாசத்தால் கட்டப்பட்ட ஆன்மா என்னும் பசு, கட்டிலிருந்து விடுபட்டு தன் தலைவனான பதியை அடைய முயலும் முயற்சியே வாழ்க்கை
24 மணிநேரமும்
வகுப்பறையிலேயே இருந்தும்
எதையும் கற்கவில்ல...
பெஞ்சும் ... டெஸ்கும் !!
உனது இதய தொகுதியில்
போட்டியிடும் எனக்கு
காதல் சின்னத்தில் வா(ழ்)க்கை
அளித்து தேர்ந்தெடுக்க
வேண்டுகிறேன்
அசைபோட பல்லில்ல,
ஆனாலும் அசைக்காத நாளில்ல.! வெத்தல வாசமும் வெள்ளந்தி நேசமும் பொதைஞ்சுதான் கெடக்குது பொக்கை வாயிக்குள்ள.! சொல்கேட்க ஆளில்ல, ஆனாலும் சொல்லாத நாளில்ல! அரைச்ச பொடிக் கணக்கா நரைச்ச முடிக் கணக்கா அம்புட்டு கெடக்குது அனுபவம் அதுக்குள்ள.! உடுக்கை போல கை நடுங்கும் கொட்டப் பாக்கு எடுக்கயில; உரலுங்கூட இசை முழுங்கும் உலக்கை புடிச்சு இடிக்கயில.! சிறுவாடா சில்லறைய முடிஞ்சுக்குவா சீலையில; முட்டாயி வாங்கிக்கன்னு கொடுத்துடுவா கேட்கயில.! சிசிடீவி சின்ன டீவி இவ இருந்தா தேவையில்ல; இவ சொல்லும் கதை முன்னே அவதாரும் மிகையில்ல.! ஆடாத தலையக்கூட ஆட்டியாட்டி பேசுறதும், காதோரம் வளையத்த காட்டிக் காட்டி பேசுறதும் அழகுன்னு சொன்னாங்க அசலூருக்காரங்க.! அடியே.. தொண்ணூறத் தொட்டவளே, தொங்குஞ் செவி கொண்டவளே.. தானாவே தலையாடும் நீ பேசத் தண்டட்டி தூளியாடும்.! நினைச்சுப்பாத்தா பேரழகி நீதானடி திண்ணைக் கிழவி.! உன்னயத்தான் பல நாளா தேடுகிறேன் காணவில்ல, உன்னையிழந்த துக்கமோ என்னவோ இன்னைக்குப் பல வீட்டில் திண்ணையையும் காணவில்ல.!உன் நினைவுகளை
குப்பையில் போட்டேன் ...
அவை
மக்காத குப்பைகளாகி
என் இதய நிலத்தை
நீர் வற்றி
போக செய்து விட்டன !!
என் நம்பிக்கைகள்
இன்னமும்
உயிரோடுதான் இருக்கின்றன ...
கல்லறையில் !!
எதற்கோ
நீ எழுதிய முன்னுரை
என் காதலுக்கு
முடிவுரை ஆகி விட்டது !!
ஆரிக்கிளில் வந்து சேரும் உன் நினைவு
அப்படியே வெளியேறுது வென்ட்ரிக்கிளில்
உன் மூச்சு காற்றை மட்டும்
கடத்துவேனென்று
அடிக்கடி அடம் புடிக்குது ட்ரேக்கியா
எந்த பிம்பம் கண்டாலென்ன
ஆப்டிக் நெர்வ் காண்பது
என்றென்றும் உன் சிக்னலே
கேட்டவர்கள் சொன்னார் நீ இதயத்திலென்று
எனக்கன்றோ தெரியும் உன் வாசம்
மோட்டார் கார்ட்டெக்ஸிலென்று
===========================
தேர பூச்சி போல மனசுல ஒட்டிகிட்ட
ஏர புடிச்சு மச்சான் மனச உழுது புட்ட
கிச்சடி செம்பா நெல்ல போல வெளஞ்சு புட்ட
மச்சான் வாலிபத்த தினம் உசுப்பி விட்ட !
சத்தம் போடுதடி தென்மேற்கு சாரல் மழ
சித்தம் ஏங்குதடி சேலையில் நீ கொட புடிக்க
ரத்தம் ஓடிடும் நரம்புகளெல்லாம்
நித்தம் தேடுதடி காதல் பாடம் படிக்க !
வேலியோரம் இருவாட்சி பூத்து நிக்குதடி
ஓங்காதோரம் கத சொல்ல காத்து நிக்குதடி
தோளோரம் சாஞ்சுக்க நீயிருந்தா
நெஞ்சோரம் மோகமும் பாத்தி கட்டுமடி !
ஆசை விதையை
விதைத்து விட்டேன் ...
அன்பு மழையை
எப்போது பொழிவாய் !!
---- காதல் விவசாயி
பலருக்கு
இதயம்
உடலின் ஒரு
பாகம் ...
எனக்கு அது
பாக்கியம் ...
நீ இருப்பதால் !!
பூமி
தன்னை அலங்கரித்து கொள்கிறது ..
நீ போடும்
கோலத்தால் !!
உன்மீது கொண்ட
மோகங்கள் தீர
யாகங்கள் செய்ய வேண்டுமா !
இல்லை
யுகங்கள் தோறும்
பிறக்க வேண்டுமா !!
நான் தொலைத்த
கவிதை நீ ....
நீ தொலைத்த
காதல் நான் !!
மனப்பூர்வமான எச்சரிக்கை ...
காதலிப்பது
இதய நலத்திற்கு தீங்கானது !!
உன்னை பார்ப்பதில்
என் கண்களை விட
ஆர்வம் அதிகம்
கண்ணீர் துளிகளுக்கு ...
உன்னை பார்க்கும் போதெல்லாம்
வந்து விடுகிறது !!
இன்னமும் தெரியவில்லை
எந்த ரயில்
உன்னை என்னிடம் சேர்க்கும் ...
இல்லை ...
எந்த ரயில்
என்னை உன்னிடம் சேர்க்கும் !!
பூக்கும் பூக்களெல்லாம்
இறைவனடி சேர்வதில்லை ...
சில பூக்கள்
புண்ணியமும் செய்திருக்கின்றன
உன் கூந்தல் சேர்வதால் !!
பேசவே தெரியாதே
என் பேனாவுக்கு ...
கவிதை பாட
எப்படி கற்று'கொடுத்தாய் !!
நிழல் அழகு ... வெயில் இருப்பதால் !
குளிர் அழகு ... வெப்பம் இருப்பதால் !
உணவு அழகு ... பசி இருப்பதால் !
இறைவா நீ அழகு ....
சாத்தான் இருப்பதால் !!
பித்ருக்களுக்கும் கட்டுப்பாடு
வற்றல் வடாம்
எடுக்க அனுமதி இல்லை ..
ஆடி அமாவாசையன்று மட்டும்
தர்ப்பண சோறு!!
கல்லை எடுத்து போட்டு
தண்ணீர் குடித்து
புத்திசாலி என காட்ட
நான் தயார்தான்
தண்ணீர் எங்கே முட்டாள்களே !!
கல்லை போட்டால்
தண்ணீர் வராதா ...
கரன்சிக்கு எங்கே
போவேன் !!
செடி முழுக்க முட்கள்
ஓரத்தில் ஒரே ஒரு பூ
மைனாரிட்டிக்குத்தான் மரியாதை
பெயர் ரோஜா செடியாம் !!!
ஏண்டா ...
துண்டு சீட்டுல
எதையாவது கிறுக்கி படிச்சா
கவிஞர் ஆக்குவோம்னு நெனச்சியா ....
துண்டு சீட்டு படிக்கிறவங்கள
முதல்வர் ஆக்கினாலும் ஆக்குவோம்
கவிஞர் ஆக்கமாட்டோம் ...
ஓடிப்போய்டு !!!
===================================
தாஜ்மகால் காதல் பரிசாக கேட்டாள்
கல்லறையை எப்படி
காதல் பரிசாக தருவேன்??
==================================
காதலுக்கு
சாதியில்லை
மதமில்லை.....
காதலித்து
பிறக்கும்
குழந்தைக்கு
உண்டு
=================================
நம்புங்கள்...
வயது ஏற ஏற
எனக்கு அறிவு முதிர்ச்சி
வந்திருக்கிறது....
குழந்தை பருவத்தில்
பலூனுக்கே குதூகலித்த மனது
இப்போதெல்லாம்
ரூபாய் நோட்டுக்குதான்
குதூகலிக்கிறது
===================================
பாற்கடலை
பருக நினைத்த பூனை போல
==================================