உன்
நடை கண்டு
அன்னம் மயங்குகிறது !
நடை கண்டு
அன்னம் மயங்குகிறது !
இந்நாள் வரை
தவறாக
நடந்தேனோ என்று !
உன்
குரல் கேட்டு
குயில்
மௌனமாகி விட்டது !
இந்நாள் வரை
தவறாக
ஒலித்தேனோ என்று !
தவறாக
நடந்தேனோ என்று !
உன்
குரல் கேட்டு
குயில்
மௌனமாகி விட்டது !
இந்நாள் வரை
தவறாக
ஒலித்தேனோ என்று !
உன்
முகம் கண்டு
நிலா நாணுகிறது!
இந்நாள் வரை
கொண்டது
வீண் கர்வம் என்று !
உன்
கூந்தல் வாசம் கண்டு
ரோஜா வெட்கப்படுகிறது !
இந்நாள் வரை
வாசம் தந்தது
யார் என்று !
உன்
இதழ் சிவப்பு கண்டு
குங்குமப்பூ வாடுகிறது !
இந்நாள் வரை
தன் நிறத்திற்குத்தான்
பெருமை என்று
நினைத்ததற்காக!
உன்
மொழிகள் கேட்டு
தேனீ மயங்குகிறது!
இந்நாள் வரை
தேனில்தான்இனிமை என்று
நினைத்ததற்காக!
உன்
கூந்தல் கண்டு
மேகம் தடுமாறுகிறது !
இந்நாள் வரை
தான்தான் அழகு என்று
நினைத்ததற்காக!
உன்
அசைவுகளை கண்டு
மயில் தள்ளாடுகிறது!
இந்நாள் வரை
தான்தான் அழகு என்று
நினைத்ததற்காக!
No comments:
Post a Comment