Friday, August 28, 2026

கரப்பான்பூச்சி காதல் கட்சி

மயில்
குயில் 
தும்பி 
பட்டாம் பூச்சியென 
காதலுக்கு 
உவமை சொல்ல 
எதைஎதையோ 
படைத்துவிட்டு ...
எதற்கும் 
உதவாமல் 
எனை ஏன் படைத்தாய் ?
இருட்டில் மட்டும்
வெளியே வரும் 
கரப்பான்பூச்சி போல...
எல்லோரும் உறங்கிய பிறகும்
உன்னை நினைத்து 
விழிக்கிறது
என் காதல்...
வெளிச்சம் வந்ததும்
ஒளிந்து கொள்ளும்
கரப்பான்பூச்சி போல...
உன்னைப் பார்த்ததும்
மனசுக்குள்
ஒளிந்துகொள்கின்றன 
உன்னிடம் 
சொல்ல நினைத்த 
வார்த்தைகள்!
உன் வீட்டுச் 
சமையலறையில்
அங்குமிங்கும் 
ஓடிக்கொண்டு 
நீ வந்தால் மட்டும் 
வெளியே எட்டிப்பார்ப்பது 
கரப்பான்பூச்சி அல்ல ..
என் காதல்!
என்னென்னமோ 
செய்தாகி விட்டது ...
கரப்பான் பூச்சியாய்
மனதை 
அரித்துக்கொண்டிருக்கிறது 
உனது நினைவுகள்!
சாப்பிடும் போது 
நீ சிந்தும் 
உணவுத்துணுக்குகளை 
தேடும் 
கரப்பான் பூச்சிபோல் 
நீ 
அவ்வப்போது 
சிந்தும் ஓரப்பார்வையை 
தேடுகிறது 
எனது இதயம் !
நீ 
அஞ்சுவது கூட 
அழகாகத்தான் இருக்கிறது ..
உன் அச்சத்தை ரசிக்க 
கரப்பான்பூச்சியாய் 
பிறந்திருக்கலாம் !
அச்சத்தில் 
நீ 
கரப்பான்பூச்சி 
என்று கத்தியபோது 
தோன்றியது ...
கரப்பான்பூச்சியாய் 
பிறந்திருக்கலாம்...
என் 
பெயரை உச்சரித்திருப்பாய் !
கரப்பான்பூச்சிக்கு
வீட்டின் மூலைகள்தான்
பாதுகாப்பான இடமாம்...
என் காதலுக்கோ
உன் இதயத்தின் 
மூலைதான்
பாதுகாப்பான இடம்!
இறக்கைகள் 
இருந்தும் 
பறக்க முடியாத 
கரப்பான்பூச்சி போல 
முழுதும் காதல் இருந்தும் 
சிறகடிக்க முடியாமல் 
திணறுகிறது மனம் !

No comments:

Post a Comment