Thursday, December 27, 2012

எதிர்காலம் நீ ..மட்டுமே ..!!!!

முள்ளில் நடந்தபோது 
தூக்கமின்றி உழைத்தபோது 
தினசெலவிற்காய் தவித்தபோது 
எதிர்காலத்தை நினைத்து அயர்ந்தபோது
பகிர்ந்து கொள்ள பசியை தவிர வேறில்லை என்று மயங்கியபோது 
.....
.....
என்னோடு வருவேன் என்றாய்  ....!!
......
......
கூடொன்று அமைத்து 
உனக்கே உனக்கென்று ஒவ்வொன்றாய் வாங்கி சேர்த்து 
எதிர்காலம் உனக்கென்று நினைத்து 
வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள துடித்தபோது 
......
......
ஏனிந்த மயக்கம் ....?
எதற்கிந்த தயக்கம் ....?
......
......
மலர்பாதையும் முள்பாதை ஆனது ...
தூங்கா இரவுகள் மீண்டும் வாட்டுது ....
.....
.....
இப்போதும் ... ஓன்று மட்டும் புரிகிறது ....
எதிர்காலம் நீ ..மட்டுமே ..!!!!


 

Sunday, December 23, 2012

ஒரு வேளை ... நீ வருவாயானால் ....


ஒரு நாள் ....

உன்னை சுற்றி வரும் தென்றல் ... என் சுவாசம் இல்லாமல் ...
என் மாளிகை திறந்திருக்கும் ... என் சுவடு இல்லாமல் .....

ஆனால் ....

தென்றல் சுமந்து வரும் ... உனக்காக பூத்த என் தோட்டத்து பூக்களின் வாசத்தை ...
மாளிகை கதை சொல்லும் .... உன் சுவடுகளுக்காக நான் காத்திருந்ததை ....

காலம் மட்டும் கடந்து போகும் ........
கனவுகளை விட்டு ......

Friday, November 23, 2012

விடியல் காத்திருப்பதில்லை


என்னை விட உன்னை நேசித்தவருண்டு 
உன்னை விட என்னை எவரும் நேசித்ததில்லை !!!

உன் தேவைகள் யதார்த்தமானவை ..
என்  உணர்வுகள் புரிந்து கொண்டன - தாமதமாய் !!!!

அக்கரை  ஒன்றும் தூரமில்லை ...
அதிக தூரம் வந்துவிட்டேன் !!!

லாபம் இன்றி ஏது வியாபாரம் ....
காரணம் வாழ்க்கை இங்கு ஆதாரம் !!!!

இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை ...
வழக்கிட இனி மனதும் இல்லை  !!!!!

என்னோடு வர உனக்கு விருப்பமில்லை - ஆனால் 
எனக்கு விருப்பமில்லை நீ தனித்திருப்பதில் !!!

தோற்பது யாராக இருந்தாலும் ....
ஜெயிப்பது நீயாக இருக்க வேண்டும் !!!!

ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று ....
எதை இழந்தேன் என்று புரியவில்லை !!

வாள் பட்ட காயம் கூட ஆறிவிடும் ...
நாள் பட்ட விதை முளைப்பதில்லை !!!

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு ....
உணர்வுகளை மீறினால் வாழ்வும் நஞ்சு !!!

நீ நீயாக இருக்க  ...
நான் நானாகவே இருக்கிறேன்  !!!!

பொருந்தாத காலத்தில்  .....
நீங்காத நினைவுகள் !!!!!!!

உதிர்ந்து  போன சருகாய்  ...
கலைந்து போன கனவுகள் !!!!

நான் ஒன்றும் பினிக்ஸ் பறவை அல்ல ...
சாம்பலில் இருந்து எழ !!!!

நெருங்கி வருகிறது ....
விடியல் அல்ல ... அஸ்தமனம் !!!

மீண்டும் விடியலாம் ..... ஆனால் ..
விடியல் காத்திருப்பதில்லை !!!!

Thursday, November 22, 2012

மாறன் செய்த காயம்


கொத்து கொத்தாய்  மலர்கள் 
பூஜைக்கு போவதேதோ !!
முத்து முத்தாய் ஆசைகள் 
என் காதலும் அது போல் தானோ !!!

விழியோரம் தினம் தினம் 
உலா வரும் கரு மேகங்கள் !!!
தோழி உனக்கு புரியாதோ 
என் மனதின் தாபங்கள் !!!

பனித்துளி சுமக்கும் மலர்கள் 
பகலவன் வரும் வரை !!
நீர்த்துளி சுமக்கும் விழிகள் 
தோழி நீ வரும் வரை !!

புரிந்தும் பாரா  முகமாய்
புறக்கண் காட்டும் உன் மாயம் !!
தெரிந்தும் தொடருது என் நினைவு 
இது மாறன் செய்த காயம் !!

கனவு நாயகியே


கனவு   நாயகியே 
கண் திறந்து நீயும் பார் 
பார்க்காமல் போவதுவும் ஏனோ 
பரிதவிக்கிறேன் தினம் நானும் 

அன்று நீ காணாத   காற்று 
இன்று நீ எங்கள் இதயத்தின் நாற்று 
போராடி போராடி தோற்று 
போதும் இனியாவது  மனதை மாற்று 

விரும்பிய வாழ்க்கை தனை தேடி 
திரும்பிய பக்கமெல்லாம் ஓடி 
அரும்பியதே ஆசைகள் கோடி 
இரும்போ உன் மனது என் சேடி 

கடல் கடந்து போனவனுக்கு  
விரல் கடக்க துணிவில்லை 
விரல் நுனியில் உலகமாம் 
நிழல் கூட எனதில்லை 

கணினியில் மோகம் கொண்டு 
கானல் நீரில் நனைந்து 
மனம் ஏங்கும்  மோனத்தில் 
கனல் மூட்டுது இதயத்தில் 

இல்லத்தில் நீ இருந்தால் 
அல்லல்  வர அஞ்சுமே 
வெல்லத் தமிழில் கொஞ்சம் 
மெல்லச்  சொல் நீயே தஞ்சம் 

தளர்ந்து போனது மனது 
முதிர்ந்து போனது உடம்பு 
உதிர்ந்து போகும் நிலையிலும் 
அயர்ந்து போகாது உணர்வு 

துள்ளி எழும்  நாளில் 
வெள்ளியாய் நீ இருந்தாய் 
துவண்டு விழும் நாளில் 
தோளோடு சாய்ந்து விடு 

வட்டமிட்டு போகும் மேகம் 
முத்தமிட்டு போகுது நிலவை 
சத்தமின்றி நான் அடங்கும்முன் 
சொத்தாய் நீ வந்து விடு 

Wednesday, October 31, 2012

குயிலோசை

எனக்கு தெரியும் 
என்னை மட்டுமல்ல  
என் கவிதைகளையும் 
நீ விரும்ப மாட்டாய் என்று ...!
ஆனால் ......
உனக்கு தெரியுமா ...  !!!?
நான் மட்டுமல்ல 
என் கவிதைகளும் 
உன்னை விரும்புகின்றன !!!!
==============================
என் கவிதைகளை நினைக்கும்போது 
எனக்கே பொறாமையாக இருக்கிறது 
....
என்னை காணும்போது 
புன்னகை கூட 
சிந்தாத உன் உதடுகள் 
என் கவிதைகளை படிக்கும்போது
கேலி புன்னகையாவது 
சிந்துகிறதே 
============================
எப்படி நான் 
ஒப்பு கொள்ள முடியும் ... !!?

கம்பனும் காளிதாசனும் 
கவிஞர்கள் என்று ....!!!

உன்னை பாடவில்லையே அவர்கள் ... !!!

கால தேவனுக்கு 
அவர்கள் மேல் என்ன கோபம் ... !!?

உன்னை தாமதித்து படைத்து விட்டானே !!!!

===================================
மொட்டை மாடி ....
நிலவில் உன்னை கண்டேன் ....
கிறுக்கினேன் சில வரிகள் ....!!!

மின்னல் அடித்து 
படித்து பார்த்தது வானம் ...

மேகங்களை அனுப்பி 
கண்ணீர் சிந்தியது ...

கூடவே 
இடியாய் 
நகைக்கவும் செய்தது  ...

ஹ்ம் .... வானமும் உன்னைபோலத்தான் 
==============================
அவள் சொன்னாள் ...

உன் கவிதைகள் 
புல்லரிக்க செய்கிறது ....

ஒரு வேளை ...
அவை ...
செல்லரித்த என் 
மனதில் இருந்து
பிறந்ததாலோ ....!!!?
=============================
பேனா மையோடு 
உன் நினைவுகளையும் 
ஊற்றி எழுதினேன் ..
.....
உன் பெயரை தவிர 
எதையும் எழுத 
மறுக்கிறது ....!
============================

Saturday, October 27, 2012

உன்னை சுவாசிப்பதால்



தினம்
காலையில் விழிக்கிறேன் ...
குளிக்கிறேன் ....
நடக்கிறேன் ....
பேசுகிறேன் ...
சாப்பிடுகிறேன் ...

.....

எப்படி என்னால் முடிகிறது ....
....
புரிகிறது ....

உன்னை சுவாசிப்பதால் தான் 

படைப்பு



ரொம்ப நாள் 
யோசித்திருக்கிறேன்
நிலவு .....
ரோஜா ....
தென்றல் ...
மழை மேகம் ...
நதி ....
.....
கடவுள் 
ஏன் இவையெல்லாம் படைத்தான்
....
உன்னை கண்ட பின்புதான் 
புரிந்தது 
....
உன்னை படைப்பதற்கு முன்
கடவுள் 
எடுத்து கொண்ட 'ட்ரைனிங்' அது 

கண்ணாடி


அஞ்சு ரூபாயில் இருந்து
ஐயாயிரம் ரூபா வரை
கண்ணாடி வாங்கி
பார்த்து விட்டேன் 
எந்த 
கண்ணாடியும்
உன் மனதை போல
என்னை
அழகாக காட்டவில்லை

மின்சாரம்


கண்ணே ... 
தமிழ்நாடு 
மின்சாரம் இல்லாமல் 
தவிக்கிறதாம் 
உன் கண்களில் இருந்து 
கொஞ்சம் கொடுத்து 
உதவேன் 

உனக்காகவே

உன்னை காண வெட்கி தானோ 
நிலவு
மாதத்தில் ஒரு நாள் மட்டும் வந்து போகிறது ?
நீ சூடாததால் தானோ
ஏன் வீட்டு ரோஜாவும்
வாடிப்போனது  ?
உனக்கு  வியர்பதால் தானோ
காற்று தென்றலாகி வீசுகிறது ?
உன்னை தொடும் ஆசையில் தானோ
வானம் தன் மழை கரங்களை 
அடிக்கடி நீட்டி பார்கிறது ?