Monday, May 10, 2021

ஆடு

மார்கழி குளிரத்தான் புரிய வச்ச
சித்திர வெயில நெஞ்சில எரிய வச்ச
பச்ச புள்ள கண்ணுலதான் திரிய வச்ச 
பச்ச வெறக ஓரக்கண்ணால் எரிய வச்ச
ஆசைகள அடிமனசுல கரிய  வச்ச
ஆடு போல அங்குமிங்கும் திரிய வச்ச 
நேத்து கூட கனவில் வந்து சரிய வச்ச 
புரியாத புதிர் கதய மெல்ல புரிய வச்ச 
காட்டு மேல ஆடு மேச்சு போற புள்ள 
பொட்டு வச்சு பூ முடிக்க  வாடி புள்ள!


கரிசக்காட்டு பாதையில காத்திருக்க வச்ச
கம்பங்கூழ் சுவையில கூட உன்னை ரசிக்க வச்ச
தென்னங்கீத்து சலசலப்ப கேக்க வச்ச
தேடி வரும் உன் காலடி ஓசை நினைக்க வச்ச
மழைத்துளிய கன்னத்தில வழிய வச்ச
மனசுக்குள்ள காதலையே பழக வச்ச
காட்டு மேல ஆடு மேச்சு போற புள்ள
கைய புடிச்சு வாழ்க்கை நடத்த வாடி புள்ள!
 

No comments:

Post a Comment