Saturday, January 29, 2022

நிமிட கதைகள்

 நிமிட கதைகள் 


ஆன்டி வைரஸ் 

டெவெலப்பருக்கு 

கொரோனா பாசிட்டிவ் !


காய்கறிகள் அனைத்தையும் 

விற்றுவிட்டு 

குழந்தைகளுக்கு 

ரசம் வைக்க ஆரம்பித்தாள் 

காய்கறிக்காரி !


செல்லாத 

நாணயங்கள் மட்டும் 

வீட்டில் இருந்தும் 

பணக்காரராகி விட்டார் ...

ஏலத்தில் விட்டு !


தவளையை 

விழுங்கி கொண்டிருந்த 

பாம்பின் தலைக்கு மேலே 

வட்டமிட்டு கொண்டிருந்தது 

கழுகு !


கோவில் வாசலில் உட்கார்ந்து 

பிச்சை எடுக்கும் 

பிச்சைக்காரனுக்கு தெரியவில்லை 

உள்ளே போய் கடவுளிடம் 

வசதியான வாழ்வை 

வேண்டலாமென்று !


வலையில் சிக்கிய 

கொழுத்த மீனை கண்டு 

குழம்பி 

காலியான வயிறையும் 

காலியான பாக்கெட்டையும் 

தொட்டு பார்த்தான் மீனவன் ...

விற்கவா ...

சாப்பிடவா !


இரும்பு மரங்கள் 

நிறைய எழும்பின ...

இருந்தும் கூடு கட்ட 

முடியவில்லை சிட்டுக்குருவிக்கு ...

செல் போன் டவர் !


மரத்தை வெட்டி 

தயாரிக்கப்பட்ட பேப்பரில் 

சுவரொட்டி அடித்து 

ஊர் முழுதும் ஓட்டினார்கள் 

மரம் வளர்ப்போம் ...

மழை பெறுவோம் !


2122

வீட்டிற்கு ஆறு 

சிலிண்டர்கள் 

இலவசமாக வழங்குவதாக 

சொல்லியிருந்தது ஒரு கட்சி 

தேர்தல் அறிக்கையில் ...

ஆக்சிஜென் சிலிண்டர்கள் !


சந்திராயனை 

வெற்றிகரமாக அனுப்பிவிட்டு 

மகனுக்கு தீபாவளி ராக்கெட் 

வாங்க மறந்து 

வீட்டிற்குள் நுழைந்தார் 

இஸ்ரோ விஞ்ஞானி !


தங்கைக்கு 

ஸ்கூட்டி வாங்கி கொடுக்க 

முடிவு செய்தான் அண்ணன் ...

மகளை ஸ்கூலுக்கு 

கொண்டு விடுவாளே !


மருந்து  கடை முதலாளி 

சுகர் மாத்திரைக்கு அதிகமாய் 

ஆர்டர் செய்தார் ...

பக்கத்தில் 

பேக்கரி கடையும் 

ஆரம்பித்து விட்டார்களாம் !


நிறைய வரிகள் 

இருந்தன ...

இருந்தும் 

ஒருவரி கூட புரியவில்லை ...

வரிக்குதிரை !


கூகிள் மீட் இல் 

பெண் பார்த்து விட்டு 

வாட்சப் பில் மெசேஜ் 

அனுப்பலாம் என்று 

விளம்பரம் போட்டிருந்தது 

மேட்ரிமோனியல் வெப் சைட் !


உங்களுக்கு 

பாசமாக சமைத்து போட்டு 

வளர்த்த பெற்றோருக்கு 

மாத சந்தாவில் 

சாப்பாடு அனுப்பி 

மகிழுங்கள் என 

விளம்பரம் செய்தது ஸ்விக்கி !


கொரோனா வைரஸை 

ஒழிக்க மாட்டீர்களா கடவுளே 

என்று வேண்டியவனிடம் 

பரிதாபமாக

சொன்னார் கடவுள்...

பாவ மன்னிப்பு வழங்கவே 

எனக்கு நேரம் போதவில்லை !


குழந்தை சொல்லும் பொய்யும் 

அழகாக இருக்கிறது...

மிட்டாய் கேட்க மாட்டேன் 

கடைக்கு என்னையும் 

கூட்டிட்டு போ அப்பா !


அடுத்த நாள் காலை 

ஐந்து மணிக்கு 

அலாரம் செட் செய்தவுடன் 

மொபைலில் வந்தது 

வார்னிங் ....

உயிரோடு இருப்பாய் என்று 

நிச்சயமாக தெரியுமா !


தனது மகன் 

சமூக சேவகர் விருது பெறுவதை 

தொலைக்காட்சியில்

அப்பா பார்த்து கொண்டிருந்தார் 

முதியோர் இல்லத்திலிருந்து !


நேரத்திற்கு வீட்டுக்கு வந்து 

சாப்பிடுங்க 

உடம்பை கெடுத்துக்காதீங்க என்று 

மனைவி சொல்லி அனுப்பினாள் 

ஸ்டார் ஹோட்டல் 

முதலாளியான கணவனிடம் !


பழைய சாமான்களை 

கோணியில் போட்டு 

சுமந்து சென்ற சிறுவனை 

வியந்து பார்த்து யோசித்தான் 

புத்தக பை சுமந்த சிறுவன் ...

இவன் எந்த ஸ்கூலில் 

படிக்கிறான் !?



 





Thursday, January 27, 2022

Nakkal

 தபால்காரர் 

நூற்றுக்கணக்கில் 

போஸ்ட் போடுகிறார் 

தினம் ... 

'லைக் பண்ணுவாரில்லை 


நான் செல்லுமிடமெல்லாம் 

நீ வேண்டும் ....

நரகத்தை தவிர !


நமது எம் பி

ஆயிரத்து இருநூறு முறை

வாய் திறந்திருக்கிறார்

நாடாளுமன்றத்தில் ...

கொட்டாவி விடுவதற்கு


அன்பே ...

பகலில் வெளியே வராதே...

உன்னை கண்டால்

வியர்க்கிறதாம்

சூரியனுக்கு


Manasu

 


உன்னைத்தவிர 

வேறெதையும் 

நினைக்க மாட்டேனென 

குரங்காய் 

பிடிவாதம் பிடிக்கிறது 

மனசு 


உன்னையே 

எப்போதும் நினைத்து 

மாடாய் அசை போடுகிறது 

மனசு !




Thursday, January 20, 2022

கல்லறை கவிதைகள்

பேட்ஸ்மேன்
விக்கெட் வீழ்ந்தது
வாழ்க்கை விளையாட்டில்

செல்போன் தயாரிப்பாளர்
செல் விற்றவன் உடல்
செல்லரிக்கிறது

கொத்தனார்
குடும்பமாய் பலர் தூங்க
வீடு கட்டியவனுக்கு
இன்னொருவன் கூடு கட்டினான்
தனியாக தூங்க

ஆசிரியர்
கோர்ஸ் முடிந்தது
கற்பித்தவனுக்கு

கேஷியர்
செல்லா நோட்டானது
வாழ்க்கை

விலைமகள்
இங்காவது
இவள் தூங்கட்டும்
தனியாக

அரசியல்வாதி
பணத்தை காட்டாதீர்கள்
எழுந்து விடப் போகிறான்

நடிகன்
வாழ்ந்தது போதுமென்று
பேக்அப் சொல்லிவிட்டான்
எமன்

சாஃப்ட்வேர் இன்ஜினீயர் 
சாஃப்ட்வேர் void
ஹார்டுவேர் abandoned 

நடிகை
கவர்ச்சியான உடல்தான்
கண்டு ரசிக்க தெரியவில்லை
உண்டு ரசிக்கின்றன
புழுக்கள்

ரேஷன் கடைக்காரன்
இறைவனும் 
இவனைப்போலத்தான்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு மாதிரி
அளந்து போடுகிறான்
ஆயுளை ...

வாட்ச்மேன்
கண்விழித்து
காவல்காத்தும்
எமன் களவாடிவிட்டான்
உயிரை

Saturday, January 8, 2022

காலமழை

அன்பெனும் ஓலை கொண்டு
பந்தல் அமைத்தேன்
மோகமெனும் தீயில் அது
பற்றியெரியக் கண்டேன்

விழி சிந்திய சொற்களில்
கவிதை கண்டேன் - என்
விழி தீய்ந்து போனபின்னே
எழுத்தில் வடித்தேன்

காலமழை பெய்ததனால்
மலர்ச்செடியாய் முளைத்தேன் - உன்
காதல்மழை பொய்த்ததனால்
கள்ளிச் செடியாய் வளர்ந்தேன் 

கூட நெறய பூவ வச்சு
பாத்திருக்க - உன்
கூட பேச ஆச வச்சு
காத்திருக்கேன்

கூட மல்லி வாசம்
ஆள தூக்குதடி
கூட நீயும் துணையிருந்தா
பாலையும் பாற்கடலடி

காதலிப்பதாய் 
சொல்லிவிட்டு
காணாமல் போனாள் அவள் ...
டிக்ளேர் பண்ணிவிட்டு
யூஸ் பண்ணாத
வேரியபிள் போல
அனாதையாய் நான்!

Thursday, January 6, 2022

கடவுள்

 தங்கம் ...

வெள்ளி  ...

நோட்டுகள் ...

என்று கொட்டினார்கள் ...

சலனமின்றி 

பார்த்தார் 

கடவுள் !


"யார் வைத்திருக்கா பாரு" 

என்று குதூகலித்த உறவுகள் 

இன்று கேட்கின்றன 

"அலைபேசியில் 

அழைத்து விட்டு 

வந்திருக்கலாமே" !


சிலந்தி வலை போல 

அழகாக இருக்கிறது 

உன் காதல் ...

நான்தான் பூச்சி போல !


கோவில் இல்லா ஊரில் 

குடியிருக்காதீர்கள் ...

காதல் இல்லா ஊரில் 

பிறக்காதீர்கள் !


B.P  க்குமுன் 

உப்பில்லா பண்டம் 

குப்பையிலே ..

B.P  க்குப்பின்  

உப்பில்லா பண்டம் 

தொப்பையிலே ..


நீ 

கடித்து துப்ப துப்ப 

மீண்டும் மீண்டும் வளர்கிறது

உன் மீது கொண்ட 

காதல் ...

நகம் போல !


உலகம் ஒரு வட்டம் ...

என்றாவது சந்தித்தே 

தீருவாய் ...

நீ 

மறுத்து போன 

என் காதலை !


காகிதத்தில் 

தொலைந்த ...

இதயத்திலிருந்து 

தொலையாத 

கவிதை 

நீ !


விழுந்த பின்  

தவழப் பழகுகிறது 

மழை !


வெள்ளி 

முத்துக்களுக்கு 

நடுவில் 

தங்க நாணயம் !


நன்றாக 

நனைந்து விட்டது ...

துவட்டிவிட 

மனசில்லை ...

செடியில் 

ரோஜா !





Monday, January 3, 2022

வரமாகிறது

 கடல் நீரையே 

கடன் வாங்கி 

கண்ணீராய் கொட்டினாலும் 

பதிலுக்கு 

நிரப்ப முடியாது 

இந்த அனபை !


வலி என்பது 

வரமாகிறது 

தாய்மையில் !


நல்லவராக இருக்க 

பல வழிகள் இருக்கின்றன ...

தாயாக இருக்க 

ஒரே வழிதான் இருக்கிறது ...


அன்பின் 

தொடக்கமும் 

அதன் முடிவும் ! 

புதுப்பாட்டு

 உன் 

கண் மையை கொடு 

மை போட்டு தேடுகிறேன் 

தொலைந்து போன 

என் இதயத்தை !



பூமரத்தின் மேலமர்ந்து 

கூடு கட்டும் 

புதுப் புறாவே 

பூமரத்தின் கீழமர்ந்து 

புதுப்பாட்டு எழுதட்டுமா !


கொஞ்சும் இதழ் சிரிப்பை 

கொஞ்சமேனும் தாவென 

கெஞ்சுது பூக்கள் !


தின்னக்கனி கிட்டுமோவென 

கன்னக்குழி பார்த்து 

கன்னிப்போயின கிளிகள் !


பாதமலர் படுமிடத்தில் 

கோடிமலர் தூவ 

பூத்திருக்குது மரங்கள் ! 


பூவினமே உனக்காக - என் 

புவனமே காத்திருக்கிறது !

Saturday, January 1, 2022

சர்க்கரை பொங்கல் !

 சாதா பொங்கல்தான் ...

நீ 

வைத்ததால் 

சர்க்கரை பொங்கல் !


நீ 

ஒரு பொங்கல் பானையை 

தேர்ந்தெடுத்த போது 

வாடிப்போயின 

மீதமுள்ள பானைகள் !


உன் 

சேலை ஜரிகையிலுள்ள 

பானைகளை 

பொறாமையுடன் பார்க்கிறது 

நீ 

பொங்கல் வைக்கும் பானை !


நீ 

சூரியனுக்கு 

பொங்கல் வைத்தால் 

வாடிப்போகாதா 

நிலவும் நட்சத்திரங்களும் !


மஞ்சளும்

பானையும்

வாங்கியபோது

கடைக்காரன் கேட்டான்

கரும்பு வேண்டாமா என்று ..

சொல்லி விட்டேன்

என் வீட்டில்

கரும்புதான் 

பொங்கலே வைக்குதுன்னு