தங்கம் ...
வெள்ளி ...
நோட்டுகள் ...
என்று கொட்டினார்கள் ...
சலனமின்றி
பார்த்தார்
கடவுள் !
"யார் வைத்திருக்கா பாரு"
என்று குதூகலித்த உறவுகள்
இன்று கேட்கின்றன
"அலைபேசியில்
அழைத்து விட்டு
வந்திருக்கலாமே" !
சிலந்தி வலை போல
அழகாக இருக்கிறது
உன் காதல் ...
நான்தான் பூச்சி போல !
கோவில் இல்லா ஊரில்
குடியிருக்காதீர்கள் ...
காதல் இல்லா ஊரில்
பிறக்காதீர்கள் !
B.P க்குமுன்
உப்பில்லா பண்டம்
குப்பையிலே ..
B.P க்குப்பின்
உப்பில்லா பண்டம்
தொப்பையிலே ..
நீ
கடித்து துப்ப துப்ப
மீண்டும் மீண்டும் வளர்கிறது
உன் மீது கொண்ட
காதல் ...
நகம் போல !
உலகம் ஒரு வட்டம் ...
என்றாவது சந்தித்தே
தீருவாய் ...
நீ
மறுத்து போன
என் காதலை !
காகிதத்தில்
தொலைந்த ...
இதயத்திலிருந்து
தொலையாத
கவிதை
நீ !
விழுந்த பின்
தவழப் பழகுகிறது
மழை !
வெள்ளி
முத்துக்களுக்கு
நடுவில்
தங்க நாணயம் !
நன்றாக
நனைந்து விட்டது ...
துவட்டிவிட
மனசில்லை ...
செடியில்
ரோஜா !
No comments:
Post a Comment