பேட்ஸ்மேன்
விக்கெட் வீழ்ந்தது
வாழ்க்கை விளையாட்டில்
செல்போன் தயாரிப்பாளர்
செல் விற்றவன் உடல்
செல்லரிக்கிறது
கொத்தனார்
குடும்பமாய் பலர் தூங்க
வீடு கட்டியவனுக்கு
இன்னொருவன் கூடு கட்டினான்
தனியாக தூங்க
ஆசிரியர்
கோர்ஸ் முடிந்தது
கற்பித்தவனுக்கு
கேஷியர்
செல்லா நோட்டானது
வாழ்க்கை
இங்காவது
இவள் தூங்கட்டும்
தனியாக
அரசியல்வாதி
பணத்தை காட்டாதீர்கள்
எழுந்து விடப் போகிறான்
நடிகன்
வாழ்ந்தது போதுமென்று
பேக்அப் சொல்லிவிட்டான்
எமன்
சாஃப்ட்வேர் இன்ஜினீயர்
சாஃப்ட்வேர் void
ஹார்டுவேர் abandoned
நடிகை
கவர்ச்சியான உடல்தான்
கண்டு ரசிக்க தெரியவில்லை
உண்டு ரசிக்கின்றன
புழுக்கள்
ரேஷன் கடைக்காரன்
இறைவனும்
இவனைப்போலத்தான்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு மாதிரி
அளந்து போடுகிறான்
ஆயுளை ...
வாட்ச்மேன்
கண்விழித்து
காவல்காத்தும்
எமன் களவாடிவிட்டான்
உயிரை
No comments:
Post a Comment