கூந்தல்
பூக்கள்
வாடி உதிர்கின்றன
என்று
வருந்தாதே...
உன்னை
அலங்கரிக்கும்
பாக்கியத்தை
மற்ற
பூக்களும்
பெறட்டுமே
என்று...
அவை
வழிவிட்டிருக்கலாம்!
குங்குமப்பொட்டு
அழிந்துவிட்டதென்று
கவலை
எதற்கு...
உன்
நெற்றியை
பிரிந்த
சோகத்தில்...
குங்குமமே
கரைந்து
போயிருக்கிறது!
மல்லிகை
உதிர்ந்துவிட்டதென்று
மனம்
வருந்தாதே...
உன்
கூந்தலில்
கழிந்த
நொடிகளை
நினைத்தபடியே...
மண்ணில்
மயங்கிக்
கிடக்கின்றன!
காதோரம்
செருகிய
ரோஜா
வாடிவிட்டதென்று
வருந்தாதே...
உன்
கன்னத்தை
உரசிய
பெருமையில்...
சருகானாலும்
செருக்கோடு
சிரிக்கிறது...
இன்னும்
செடியில்
நிற்கும்
ரோஜாக்களைப்
பார்த்து!
விழி மை
கொஞ்சம்
கலைந்துவிட்டதென்று
கவலை
கொள்ளாதே...
உன்
விழிகளின்
மொழியை
கற்றபின்...
தன மொழியே
அதற்கு
மறந்துவிட்டதாம்!
சேலையின்
முந்தானையை
காற்று
திருடப்
பார்க்கிறதென்று
சினம்
கொள்ளாதே...
மறந்துவிட்டதாம்!
சேலையின்
முந்தானையை
காற்று
திருடப்
பார்க்கிறதென்று
சினம்
கொள்ளாதே...
அழகின்
அகராதியை
புரட்டிப்
பார்க்க...
அதற்கும்
ஆசை
வந்திருக்கும்!
மருதாணி
மங்குகிறதென்று
ஏன்
வருந்துகிறாய்...
உன்
இதழ்களின்
சிவப்பிற்கு
முன்னால்...
மங்காமல்
இருக்கும்
எதையும்
பிரம்மனால் கூட
இன்னமும்
படைக்க
முடியவில்லை !
கண்ணாடிவளையல்கள்
உடைந்துவிட்டன
என்று
தவிக்காதே...
செய்தி
தெரிந்ததுமே...
உன்
வீட்டு
வாசலில்
வளையல்
சந்தையே
கூடியிருக்கிறது!
கொலுசின்
முத்துக்கள்
சிதறிவிட்டன
என்று
கவலை
கொள்ளாதே...
நீ
சிரித்தபோது...
சிதறிய
முத்துக்களை
நான்
சேமித்து
வைத்திருக்கிறேன்!
மழையில்
சேலை
நனைந்துவிட்டதென்று
கூச்சம்
கொள்ளாதே...
வார்த்தைகளால்
நெய்துக்
கொண்டிருக்கிறேன்...
உனக்காக
மட்டும்
ஒரு
கவிதைச்
சேலையை
No comments:
Post a Comment