Wednesday, February 24, 2021
ஆசைகள்
நாடகம்
தென்றல்
Monday, February 22, 2021
Tuesday, February 16, 2021
திருவாசகம்
கூந்தல்
அனைத்தும் கல்லாகி
கல்லிதயம் கொண்ட ஒருத்தியை
ஏன் படைத்தாய்
என்றேன் இறைவனிடத்தில் ...
இதயத்தை தவிர
அனைத்தும் கல்லாகி
செயலற்று நின்றான்
அவனும் ...!!
அவளிருக்கும் திசையில்
எல்லோருக்கும்
கிழக்கில் உதிக்க
எனக்கு மட்டும்
அவளிருக்கும் திசையில்
உதித்தது ...
சூரியன் !!
அவள் என் கண்ணீருக்கு சொந்தமென்று !!
தோழியா ...
காதலியா ...
இல்லை
மனைவியா ....
எந்த சொந்தமென்று புரியாமல்
அக்னியில்
வீழ்ந்தது இதயம் ...
மிஞ்சிய சாம்பல் சொன்னது ..
அவள் என் கண்ணீருக்கு சொந்தமென்று !!
உலகத்தை அளந்து விட்டான்
உலகத்தை அளக்க
மூன்றடி தேவைப்பட்டது
பாவம் பரந்தாமனுக்கு ..
ஒன்றே முக்கால் அடியால்
உலகத்தை அளந்து விட்டான்
வள்ளுவன் !!!
=========================
Monday, February 8, 2021
சாபமென்று
எட்டாத கோவிலுக்கு
எட்டி விளக்கேற்றி
தூரத்து கோவிலுக்கு
தூண்டா விளக்கேற்றி
வாகாய் வாங்கி வந்தேன்
வரமென்று ...
கையில் வந்தபின்னே
கண்டுகொண்டேன்
சாபமென்று !!!!
என் விதியையே வாங்கிபுட்ட !!
பூவிதழ் உதட்டினிலே
பூகமபம் காட்டிப்புட்ட ...
கண்ண கொஞ்சம் சிமிட்டி
இதயத்த எகிற வச்ச ...
முந்தானை மடிப்பினிலே
என்னையும்தான் மடிச்சுவச்ச ...
காதோரம் லோலாக்கில்
காதல் கத சொல்லி வச்ச ...
சித்திரை மாசத்துல
கருமேகம் பாக்க வச்ச ...
முக்காபங்கு ஆயுசையும்
குத்தகைக்கு எடுத்துப்புட்ட ...
படச்ச பிரம்மன்கிட்ட
என் விதியையே வாங்கிபுட்ட !!
Sunday, February 7, 2021
விழி ஈர்ப்பு விசையில்
புவி ஈர்ப்பு விசையில்
இயங்குது உலகமென்று
தப்பாக சொல்லி விட்டான்
நியூட்டன் ...
உன்
விழி ஈர்ப்பு விசையில்
அல்லவா
இயங்குது என் உலகம் ...!!
வினாடி பார்வையில்
அகநானூற்றில் புரண்டு
கம்பனில் கடன் வாங்கி
இளங்கோவிடம் இரந்து
காளிதாசனில் களவாடி
நினைவுகளை கிளறி
சொற்களை சலித்து
அடித்து அடித்து எழுதி
சுமாராய் ஒரு கவிதை
கிறுக்கி விட்டு நிமிர்ந்தால் ...
வினாடி பார்வையில்
பாவாயிரம் சொல்லி
மின்னலாய் கடந்தாள்
அவள் ..!!!
இது என்ன காலம் !!?
நீ கிள்ளி போட்ட
குண்டூரு மிளகாயும்
இனித்தது ...
வெயிலில் நடந்தேன்
காதல் மேகம்
குடை பிடித்தது ...
உனது ஒவ்வொரு பார்வையும்
ஓராயிரம் கவிதை
சொன்னது ...
உனது சின்னஞ்சிறு
அசைவுகளும்
எனக்கு தலைப்பு
செய்தியானது ...
அது காதல் காலம் ..
நினைவுகளோடு மட்டும்
வாழ சொன்னது உனது
காதல் அதிகாரம் ...
இது என்ன காலம் !!?
பொய் எவ்வளவு அழகு ..
கவிதைகள் பொய்யென்று
எழுதும் எனக்கும் தெரியும் !
படிக்கும் உனக்கும் தெரியும் !
எனில் ....
பொய் எவ்வளவு அழகு ..
உன்னைப்போல !!
காயங்கள் ஆறிடுமே !
வண்ணக் கனவுகளில்
எண்ணங்கள் சிறகடிக்குமே
எண்ணங்களில் சிக்கி
வாழ்க்கைதான் கரைந்திடுமே !
எதை எதையோ சுற்றி
நினைவுகள் சுழன்றிடுமே
நினைவுகளில் சிக்கி
நிஜமும் கசந்திடுமே !
மலர் போன்ற பார்வையில்
மனதில் அனல் பூக்குமே
மடி சாய்க்க நீ இருந்தால்
காயங்கள் ஆறிடுமே !
Saturday, February 6, 2021
சொக்கி போகும் அத்தனையும் !
குட மஞ்சள்
காஞ்ச மஞ்சள்
கொல்லத்து அரக்கு மஞ்சள்
இலங்கையின் சிறப்பு மஞ்சள்
நெல்லை ருக்கு மஞ்சள் ...
சொக்க தங்கம் உன்முன்னே
சொக்கி போகும் அத்தனையும் !
காதலில் நீ நிறைகுடமடி !
வட்ட கொட புடிச்சு
வெட்ட வெளியில் நீ நடந்தா
தரிசும் வயலாகுமடி
வழித்தடமும் தோப்பாகுமடி !
எறிந்து விட்ட பம்பரமாய்
சுத்துதடி எம்மனசு ...
மதி மயக்கமென்னடி
அறிந்தும் தயக்கம் ஏனடி !
எங்கே ஒளித்து வைப்பாய்
பொங்கி நிற்கும் காதலை ..
நிறை குடம் தளும்புமோடி
காதலில் நீ நிறைகுடமடி !
நீ போதும் !
அரண்மனை வாசம் வேண்டாம்
அள்ளி கொடுக்க வேண்டாம்
அன்பான வார்த்தை சொல்லி
அரவணைக்க நீ போதும் !
பட்டு பாய் வேண்டாம்
பணங்காசு தான் வேண்டாம்
பாசமான வார்த்தை சொல்லி
மார் சாய்க்க நீ போதும் !
பெட்டியில தங்கம் வேண்டாம்
சிப்ப கட்டு கட்ட வேண்டாம்
சாந்தமான வார்த்தை சொல்லி
தோள் சாய்க்க நீ போதும் !
தணிவதுவும் எக்காலம் !
தச்சன் உலை நெருப்பும்
தணியுமடி ஒரு காலம்
மாசி பிறையே என் தாகம்
தணிவதுவும் எக்காலம் !
கொல்லன் உலை நெருப்பும்
தணியுமடி ஒரு காலம்
வைகாசி மாங்கனியே என் தாகம்
தணிவதுவும் எக்காலம் !
ஆள வட்டம் போடுதடி !
நாலு மூலை வயலுக்குள்ளே
நடு வரப்பில் போற புள்ளே
நடையை கொஞ்சம் சுருக்கி போடு
நட்ட பயிரும் விளையுமடி !
பின்னல் நடை போடும்
தண்டை கால் அழகு கண்டு
கெண்டை மீனும் துள்ளுதடி
நண்டு ஒண்ணு துரத்துதடி !
நடுவானில் பருந்து ஒண்ணு
ஆல வட்டம் போடுதடி
பொல்லாத என் கண்ணும்
ஆள வட்டம் போடுதடி !
நானும் உந்தன் பக்தனடி !
கோடாலி கொண்டை போட்டு
கோவிலுக்கு போற புள்ள
கொண்டையிலிருக்கும் கொழுந்திற்கு
கோபுர கலசமென நெனப்புடி
கோவில் சிலையழகா
கோவிலை சுற்றும் நீயழகா
சிலைகளும் தவிக்குதடி
சிற்பியைத்தான் வையுதடி
கல்லான அம்மன் முன்னே
கண் மூடி நீயும் நின்னா
அம்மனும் பிரசாதம் கேட்குமடி !
நானும் உந்தன் பக்தனடி !