Monday, February 22, 2021

உன்னோடு

உன்னோடு நடக்கையிலே
சருகும் பூக்களடி 
நீ இல்லாத பாதையிலே 
பூக்களும் கருகுதடி

மேகம் கருக்கையிலே 
குடையே காவலடி 
மோகம் பிறக்கையிலே 
முந்தானை குடை வேணுமடி

பூ வாசத்தில்
மனதும் தளிரக்குதடி 
உன் சுவாசத்தில் 
வாழும் இதயமடி 

No comments:

Post a Comment