அஞ்சன விழிகள்
பஞ்சணை போடும்
விழிகளின் அசைவில்
தென்றலும் வீசும்
தென்றலின் தாலாட்டில்
வயலோரம் கதிராடும்
மங்கையின் மேனியில்
மேலாடை சதிராடும்
சதிராடும் சிற்றிடையும்
பூப்போன்ற நடை அளக்கும்
பெண்ணவள் சிரிப்பிற்கோ
நெல்மணியும் தாளமிடும்
விழியோரம் துளிர்ப்பது
கண்ணீர் துளியோ
காதலின் வலியோ
வெண்மேகம் ஒன்று
அவள் எழில் கண்டு
மயக்கத்தில் ஆனது
கார்மேகம் என்று
யார் சொல்லி தந்தார்
மழைக்காலம் என்று
அவள் கோலம் சொன்னது
காதல் காலம் என்று
மையூற்றி எழுதவில்லை
மையலூற்றி எழுதுகிறேன்
ஏங்கிடும் நெஞ்சத்தில்
பொங்கிடும் ஆசைகளை
விளக்கி வைப்பாயோ.. இல்லை
விலக்கி வைப்பாயோ!!
No comments:
Post a Comment