துள்ளுவதெல்லாம்
உன்போல் மானல்ல
மின்னுவதெல்லாம்
உன்போல் பொன்னல்ல
பின்னுவதெல்லாம்
உன்போல் இடையல்ல
அணைப்பதெல்லாம்
உன்போல் கரமல்ல
மீட்டுவதெல்லாம்
உன்போல் விரல்ல
செப்புவதெல்லாம்
உன்போல் நாவல்ல
சிந்துவதெல்லாம்
உன்போல் முத்தல்ல
விம்முவதெல்லாம்
உன்போல் விழியல்ல
எழுதுவதெல்லாம்
உன்போல் கவிதையல்ல
No comments:
Post a Comment