வரும்போது குலமகளை கண்டு வந்தாயோ...
அவள் கூந்தல் நறுமணத்தை
வாங்கி வந்தாயோ!!
மேருமலை தாண்டி வரும் மேகமே
வரும்போது குலமகளை கண்டு வந்தாயோ...
அவள் விழி கருமையைத்தான்
வாங்கி வந்தாயோ!!
மேருமலை தாண்டி வரும் பூங்குயிலே
வரும்போது குலமகளை கண்டு வந்தாயோ...
அவள் குரல் இனிமையைத்தான் வாங்கி வந்தாயோ!!
மேருமலை தாண்டி வரும் பட்டாம்பூச்சியே
வரும்போது குலமகளை கண்டு வந்தாயோ ...
அவள் சேலை வண்ணங்களை
வாங்கி வந்தாயோ!!
மேருமலை தாண்டி வரும் முழுநிலவே
வரும்போது குலமகளை கண்டு வந்தாயோ...
அவள் முக அழகினைத்தான்
வாங்கி வந்தாயோ!!
No comments:
Post a Comment