வார்த்தை ஒன்று கேட்டிடவே
வாடியிருக்கேன் ராசா
செம்பவழ இதழாலே கனிமொழி சொல் லேசா!
குக்கரில் போட்ட அரிசியாய்
தினம் வேகுது எம்மனசு
மக்கர் பண்ணாம நீ வந்தா
நம் காதலும் தினம் புதுசு!
பெண்மான் கூட்டத்தில்
நீயொரு அதிசய பொன்மான்
உன்னோடு வாழ்ந்திருந்தால்
என்றென்றும் நான் சீமான் !
சுட்டும் விழி பார்வையால்
கட்டிவிடு காதல் நீதி மையம்
காவியங்கள் காணா காதலை
காணட்டும் இந்த வையம் !
கிழக்கில் உதிக்கும் கதிரவன்
உலகிற்கு விடியல் - உன்
மனதில் உதிக்கும் காதலே
எனக்கென்றும் விடியல் !
ஐயமின்றி காத்து நிற்பான்
வள்ளியின் காதலன் பழனிசாமியும்
கை கோர்த்து நாம் நடந்தால்
வெற்றி நடை போடும் நம் காதலும் !
கவிதை என்ற பெயரில்
உளறல்களின் எல்லை
இவன் காதல் வரிகளுக்கு வரி போட்டா
தீர்ந்திடுமோ கவிதை தொல்லை!
No comments:
Post a Comment