மல்லிப்பூ
செடியில்
பூத்தா
வாசனதான்
துளைக்கும் ...
செடியில்
பூத்தா
வாசனதான்
துளைக்கும் ...
நீ
கூந்தலிலே
வச்ச பூ ...
நீ
இடுப்பில்
சுமக்கும்
குடத்து
தண்ணி ...
தாகத்தையே
கிளப்பும் !
பருத்திக்காட்டுல
காத்தடிச்சா
பஞ்சுதானே
பறக்கும் ...
நீ
பருத்தி
சேலை கட்டி
வந்தா ...
என் மூச்செல்லாம்
பறக்கும் !
நுனிக்கரும்ப
கடிச்சு
பாத்தா
உதடு
கொஞ்சம்
இனிக்கும் ...
நீ
கடிச்சு
பாதி தந்தா ...
என் உசிரு வரை
ருசிக்கும் !
ஆத்தங்கரை
கல்லுதான்
துணியெல்லம்
வெளுக்கும் ...
நீ
துணி
துவைக்கும்
அழகை
பாத்து ...
எம்மனசு
அழுக்காகி கறுக்கும் !
ஒரல்ல
அரச்ச
வர
மொளகா...
மொளகா...
காரம்தானே
கூட்டும் ....
நீ
வச்ச
காரக்கொழம்பு ...
கரும்பின் ருசி
காட்டும்!
சித்திரை
மாசம்
வெயிலடிச்சா
பூவெல்லாம்
வாடும்....
நீ
பாசாங்குல
மொறச்சாலே ...
நெஞ்சமெல்லாம்
வாடும்
மாடெல்லாம்
களத்து
மேட்டுல
போரடிச்சு
தளரும் ...
நீ
வயல் வரப்புல
நடந்து வந்தா ...
நெல்லு தானே
உதிரும் !
மேகமெல்லாம்
சாரல் தூவ
மண்ணு வாசம்
வீசும் ...
நீ
மழ
நனஞ்சு
தோப்பில்
வந்தா ...
வாழைப்பூ கூட
ரோஜா வாசம்
பூசும் !
மேட்டு
தெருவில்
குதிரை
வண்டி
தடதடத்து
கடக்கும் ...
நீ
ஏறிப் போகும்
மாட்டு
வண்டி ...
இமயம்
தாண்டி
பறக்கும் !
அடை
மழயில்
ஆத்து தண்ணி
கரயத்
தொட்டு
ஆடும் ...
நீ
குளிச்ச
ஒடத்தண்ணி ...
என்
இதயம்
நனச்சு !
ஓடும்
மாலை
நேரம்
ஊரெங்கும்
கோவில்
மணி
முழங்கும் ...
நீ பார்த்து
போனாத்தானே ...
சாமியும்
அருளை
வாரி
வழங்கும் !
கதிரவனின்
கருணைப்
பார்வையில்
விடியல் தான்
பிறக்கும் ...
நீ
ஓரப்பார்வ
பாத்தால்
போதும் ...
வாழ்வுதானே
சிறக்கும் !
உன்னழகை
கண்டாலே
சீதைக்கும்
பொறாமை
கொட்டும் ...
உன்னழகை
பாட்டில்
சொல்ல ...
கம்பனுக்கும்
வார்த்தை
முட்டும்
No comments:
Post a Comment