தோட்டம் ஓன்று
நேரில் வந்து
நேரில் வந்து
ஆடச்சொன்னதோ ?
தோகை கொண்ட
காதல் சிந்து
பாடச் சொன்னதோ ?
ஊஞ்சல் கட்டி
ஆடச்சொன்னதோ?
தேன் சுமந்த
மல்லிகைகள்
மயங்கச் சொன்னதோ?
வானம் இன்று
கீழிறங்கி
பேசச் சொன்னதோ?
பட்டாம்பூச்சி
சிறகைத் தந்து
பறக்கச் சொன்னதோ?
நிலவொன்று
தேடி வந்து
பொட்டு வைத்ததோ ?
நட்சத்திரம்
காதல் பாடம்
படிக்கச் சொன்னதோ?
மூங்கிலில் வரும்
மோகன ராகம்
என்னை தேடுதோ ?
மனதினில் ஒரு
காதல் ராகம்
இசைக்கச் சொன்னதோ ?
நதியின் அலைகள்
தாளம் போட்டு
ஆடச் சொன்னதோ?
நெஞ்சினிலே
புது வசந்தம்
பூக்கச் சொன்னதோ?
ஆடை கட்டி
பூவும் சூடி
தென்றல் வந்ததோ ?
வாடை பட்டு
ஆசை நெஞ்சில்
மின்னல் வந்ததோ ?
No comments:
Post a Comment