நான்
காகிதத்தில்
வடிப்பதெல்லாம்
உனது
பார்வை
எனது
இதயத்தில்
எழுதும்
கவிதைகளைத்தான் !
கோணத்தை
எப்படி திருப்பி
பார்த்தாலும்
இதயத்தில்
உன் வடிவம்
ஒரே கோணத்திலேயே
விழுகிறது
என்ன சொல்வது
என்று
என்னை
யோசிக்கவே
விடவில்லை ...
உன்னை
கண்டதும்
பின்னாலே
ஓடி வந்துவிட்டது
எனது மனது ..
அரைகுறையாக
ஏதாவது
உன்னிடம்
உளறிவிடுமோ
என்று
தவிப்பாக இருக்கிறது !
சொல்லு
என்கிறாய் !
உன்னை
கண்டதும்
மனது ஓடியே
வந்துவிட்டதே !
இனி
என்ன சொல்வது
நான் !?
ஒரு பார்வை
வல்லினமாய்
வந்து விழுந்தது!
அடுத்த கணமே
அதே பார்வை
மெல்லினமாய்
மனதை வருடியது!
குழம்பி நிற்கிறான்
தொல்காப்பியன்...
"இது என்ன
புதிய இலக்கணம்?"
சொல்லிவிடு ...
"இது
தமிழின் இலக்கணம் அல்ல...
காதலின் இலக்கணம்!"
என்று!
கன்னம் வச்சு
கொள்ளையடிப்பார்களாமே !
கொள்ளையடிப்பார்களாமே !
நீ
எப்படி
கண்ணை வைத்து
கொள்ளையடிக்கிறாய் ..
என்
மனதை !
எப்போதும்
காதல்
கவிதைதானா
என்று
அலுத்துக்கொள்கிறாய்!
என்ன செய்வது?
நான்
சமூகப் பார்வையோடு
எழுத
முயலும்போதெல்லாம்...
குறுக்கே
வந்து
விழுந்துவிடுகிறது
உனது
காதல்
பார்வை!
எனது
கவிதைகளை
இலக்கியத் தரத்திற்கு
உயர்த்தித் தருவதாக
சொல்கிறது
ChatGPT...
பாவம்!
அதற்குத்
தெரியவில்லை...
உனது
பெயரை
சேர்த்தாலே
அது
இலக்கியம்
ஆகிவிடுமென்று!
தென்றல்
வீசினால் ....
தொட்டு
இன்பம்
தந்தால் ...
பூ
எப்படி
வேண்டாமென்பது ?
நேரம்
கடல் வானம்
சேர்ந்து
களிப்போடு
பேசும்
கதை என்னவோ?
No comments:
Post a Comment