Tuesday, July 21, 2026

மூங்கிலிலே வரும்

மூங்கிலிலே 
வரும் 
மோஹன ராகம் 
பூங்குயிலை 
வெல்லுமா ?
தேன் கவிதை 
சொல்லுமா ?
மேகத்தின் 
கொடை தான் 
பனியென்றாலும் 
மழையாய் மாறுமா ?
மேகத்தின் 
மின்னல் 
ஒளி கொடுத்தாலும் 
விளக்காய் 
உதவுமா ?
ஆயிரம் 
அல்லி 
பூத்திருந்தாலும் 
தாமரை 
ஆகுமா ?
கோவிலின் 
பெருமை 
பெரிதென்றாலும் 
தாயை 
மிஞ்சுமா ?
குயிலின் 
கீதம் 
இனிதென்றாலும் 
தாலாட்டாய் 
ஒலிக்குமா ?
கோடி 
தாரகைகள் 
ஒளி கொடுத்தாலும் 
நிலவைப்போல் 
ஆகுமா ?
ஆயிரம் 
மலர்கள் 
வாசம் தந்தாலும் 
ரோஜாவுக்கு 
ஈடாகுமா ?
கோவிலின்
கோபுரம்
வானைத் தொட்டாலும்
தெய்வத்தை விட 
உயருமா ?
நதிகள்
பல
கரை புரண்டாலும்
கடலுக்கு
ஈடாகுமா?
சிப்பிகள்
ஆயிரம்
கிடைத்தாலும்
முத்தொன்று
ஆகுமா?
வானவில்
ஏழு
வண்ணமென்றாலும்
விடியலின்
நிறமாகுமா?
தென்றலின்
தீண்டல்
சுகமென்றாலும்
உனது 
அரவணைப்பாகுமா?
பூக்களின்
வண்ணம்
கவர்ந்தாலும்
புன்னகையின்
அழகாகுமா?
வீணையின்
இசை
இனிமையென்றாலும்
உனது 
கொஞ்சலை 
மிஞ்சுமா?
கோடி
வார்த்தைகள்
நீ
பேசினாலும்
கண்களின்
மொழியாகுமா?



No comments:

Post a Comment