கண்
வழியே ...
என் மனது ..
கவிதை
போல்
ஓடியதோ !
உன்
விழிகள் ..
என்
இதயத்தின்
மௌனத்தை ...
தட்டி
எழுப்புகிறதோ !
உன்
இமைகள்
தென்றலாய்
வீச...
பாலைவனமான
என் இதயத்தில் ...
வசந்தம்
பூத்ததோ!
உன்
விழிகளில்
பிறந்த
காதல் ...
எனது
இதயத்தில் ...
பாடல்
ஆனதோ !
உனது
கருவிழிப்
பார்வைதான் ...
எனது
நெஞ்சில் ...
வெண்ணிலவாய்
உதித்ததோ !
கண்களின்
வழியே ...
இதயம்
கொடுத்து ...
இதயம்
கொள்கிறாய் ..
இது
என்ன
பண்டமாற்று
முறையோ !
எனது
ஆயிரம்
சொல்லம்புகளை ...
உனது
ஒற்றைப் பார்வை
மௌனமாக்கி
விடுகிறதே ...
கண்களில்
இருப்பது
என்ன
அஸ்திரமோ !
உனது
இமைத்தலில்தான்...
எனது
இதயம் ...
துடிக்க
கற்றுக்
கொள்கிறதோ !
உனது
ஓரவிழிப்பார்வையே ...
எனது
கனவுகளுக்கு
சிறகு
கட்டுகிறதே ...
நேர்விழிப்பார்வை
என்னை என்ன
செய்யுமோ !
உனது
விழிகள்
பேசும்
மொழிக்கு
இலக்கணம்
எழுத ...
அகத்தியனையோ...
தொல்காப்பியனையோ...
பிரம்மன்
இனிமேல்தான்
படைப்பானோ!
ஒவ்வொரு
பார்வையிலும்
எதை எதையோ
ஒளித்து
வைக்கிறாய்...
தேடித் தேடி
தளர்கிறது
என்
இதயம் ...
அது
என்ன
வித்தையோ!
கனவுகள்...
வானவில்கள்...
வசந்தங்கள்...
என
என்னென்னவோ
முளைக்கிறதே
என்
இதயத்தில் ...
உனது
பார்வை
விதைப்பது
என்ன
விதையோ!
எது
சிறந்த
கவிதை?
உனது
இரண்டு
விழிகளும் ...
இரண்டு
கவிதைகளை
எழுதி
போட்டி
போடுகிறதோ!
உனது
விழியதிகாரத்திற்கு ...
எனது
உதடுகளின்
மொழிகள் ...
மௌனமாகி
விடுகிறதோ!
எனது
அனைத்து உயிர்
நாடிகளையும்
ஒடுங்க
வைக்கிறது...
உனது
விழிகளில்
பிறப்பது...
அஸ்திரமோ?
இல்லை
யோக
சாஸ்திரமோ!
எனது
இதய
வாசலுக்கு ...
உனது
கண்கள்தான்
கள்ளச்
சாவியோ!
விடை
தெரியாத
கேள்விகளை
மட்டும்
விதைத்து
செல்கிறதே
உனது
விழிகள் ...
அதனால்தான்
எனது
கவிதைகள்!
இன்னமும்
தொடர்கிறதோ
No comments:
Post a Comment