Sunday, July 19, 2026

இதயத்தின் சொத்து தகராறு

உன்
காதலை
என்
நெஞ்சில்
குடிவைத்து
விட்டாய்...
என்
நினைவுகள்
எல்லாம்
வாடகையாகிப்
போனதோ!
நினைவுகளை
மாத வாடகையாய்
அல்ல...
வினாடி
வாடகையாய்
வசூலிக்கிறாய்!
காதலுக்கு
இப்படியும்
ஒரு 
விதியுண்டோ ?
ஒரு
வினாடியில்
இதயத்தில்
குடியேறினாய்...
உரிமையாளராகி
ஆள்கிறாய்...
உரிமையாளரானபின்
நினைவுகளை
வாடகையாய்
கேட்பது
விதி மீறல்
அல்லவோ?
வாடகை 
விலக்கு 
கேட்டு 
வழக்கு 
தொடுத்தால் 
உன் 
நினைவுகளை 
எனக்கே 
வரியாக 
விதிக்கிறதே ...
அங்கிருப்பது 
நீதி தேவனோ !
அல்லது 
காதல் தேவனோ !
பிரதிவாதிக்கு 
ஆதரவாக 
தீர்ப்புகள் 
எழுதப்படுவது 
காதலின் 
எழுதப்படாத 
சட்டமோ !
காதல்
பத்திரத்தை
முழுதாக
படிக்கவில்லையோ ...
ஆயுள் முழுதும்
உரிமை
உனக்கென்று
அதில்
எழுதப்பட்டிருந்ததோ !
உன் 
விழிகளும் 
அரசியல் 
கற்றுக்கொண்டதோ ...
பார்வையை 
லஞ்சமாக்கி 
என் 
ஆட்சியையே
கைப்பற்றிவிட்டதோ!
நீ 
என் 
இதயத்தின் 
சொத்தா ?
இல்லை 
என் 
இதயமே 
உனது 
சொத்தா ?
பதிலுக்கு 
உனது 
இதயத்தின் 
ஓரத்தில் 
என்னை 
குடியேற்றினால் 
தீர்ந்திடாதோ 
நமது 
இதயத்தின் 
சொத்து 
தகராறு !

No comments:

Post a Comment