உன்
மூக்குத்தி
மின்னும்
ஒவ்வொரு முறையும்...
என்
இதயம்
மின்தடையின்றி
தடுமாறுகிறது!
உன்
விழிகளும்
இதழ்களும்தான்
என்
பார்வையை
திருடிக்கொண்டிருந்தன ..
இப்போது
உன்
மூக்குத்தியும்
சேர்ந்திருக்கிறது !
கண்ணாடி
முன்னால்
நீ
நிற்கும்போதெல்லாம்...
உன்
மூக்குத்திதான்
முதலில்
புன்னகைக்கிறது!
வானில்
இருந்துதானே
மின்னல்
கீற்று வரும் ...
நிலவில்
இருந்து
வருகிறதே !
பகலில் ...
பூமியில் ...
ஒரு நிலா
மட்டுமல்ல ...
ஒரு
நட்சத்திரமும் !
பொற்கொல்லன்
செய்தது
மூக்குத்தியைதான்...
அதை
பேரழகாக
மாற்றியது
நீதான்!
அடிக்கடி
சிதறும்
உன் சிரிப்போடு
போட்டி போடுகிறது
உன்
மூக்குத்தி...
இருளை
ஓட்டுவது
யாரென்று!
கவனத்தை
ஒருமுகப்படுத்த
பயிற்சி
தேவையில்லை ...
உன்னை
பார்த்தாலே போதும் ..
உன்
விழிகள் ..
இதழ்கள் ..
இதோ இப்போது
உன்
மூக்குத்தியும்
இருக்கிறதே !
உன்னை
அடிக்கடி
கழற்றி விடுகிறாளே
என்று
மூக்குத்தியை
பரிகசிக்கிறதாம்
உன்
கை விரல் மோதிரம் ..
என்னிடம்
குறைப்பட்டு கொண்டது
மூக்குத்தி!
என்
கவிதைகள்
வரிசை
கட்டுகின்றன ...
உன்
மூக்குத்தியில்
ஒருமுறை
மின்னிவிட !
மூக்குத்தி
மின்னும்
ஒவ்வொரு முறையும்...
என்
இதயம்
மின்தடையின்றி
தடுமாறுகிறது!
உன்
விழிகளும்
இதழ்களும்தான்
என்
பார்வையை
திருடிக்கொண்டிருந்தன ..
இப்போது
உன்
மூக்குத்தியும்
சேர்ந்திருக்கிறது !
கண்ணாடி
முன்னால்
நீ
நிற்கும்போதெல்லாம்...
உன்
மூக்குத்திதான்
முதலில்
புன்னகைக்கிறது!
வானில்
இருந்துதானே
மின்னல்
கீற்று வரும் ...
நிலவில்
இருந்து
வருகிறதே !
பகலில் ...
பூமியில் ...
ஒரு நிலா
மட்டுமல்ல ...
ஒரு
நட்சத்திரமும் !
பொற்கொல்லன்
செய்தது
மூக்குத்தியைதான்...
அதை
பேரழகாக
மாற்றியது
நீதான்!
அடிக்கடி
சிதறும்
உன் சிரிப்போடு
போட்டி போடுகிறது
உன்
மூக்குத்தி...
இருளை
ஓட்டுவது
யாரென்று!
கவனத்தை
ஒருமுகப்படுத்த
பயிற்சி
தேவையில்லை ...
உன்னை
பார்த்தாலே போதும் ..
உன்
விழிகள் ..
இதழ்கள் ..
இதோ இப்போது
உன்
மூக்குத்தியும்
இருக்கிறதே !
உன்னை
அடிக்கடி
கழற்றி விடுகிறாளே
என்று
மூக்குத்தியை
பரிகசிக்கிறதாம்
உன்
கை விரல் மோதிரம் ..
என்னிடம்
குறைப்பட்டு கொண்டது
மூக்குத்தி!
என்
கவிதைகள்
வரிசை
கட்டுகின்றன ...
உன்
மூக்குத்தியில்
ஒருமுறை
மின்னிவிட !
No comments:
Post a Comment